2 மதிப்பெண்
காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
முதற்பொருள்:
- நிலம்: முல்லை (காடு)
- பெரும்பொழுது: கார்காலம் (மழைக்காலம்)
- சிறுபொழுது: மாலை
கருப்பொருள்:
- உணவு: வரகு
2). கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மழையின் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
அ) உழவர்கள் வயலில் உழுதனர்.
ஆ) நெய்தல் பூச்செடிகளைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
3 மதிப்பெண்
கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன'. - காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
- குறிஞ்சி நிலத்தில், அன்று வேட்டையாடுதல், கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல் போன்றவை நடைபெற்றன. இன்று மலைவாழ் இன மக்கள் தேன் எடுத்தல், மூலிகைகள் சேகரித்தல், கைவினைப் பொருள்கள் தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முல்லை நிலத்தில் அன்று முதல் இன்று வரை கால்நடைகளை மேய்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
- மருதநிலத்தில் அன்று இயற்கை வேளாண்மையும், இன்று நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய வேளாண்மையும் நடைபெற்று வருகிறது.
- நெய்தல் நிலத்தில் அன்று முதல் இன்று வரை மீன்பிடித்தலும் உப்பு தயாரித்தலும் நடைபெற்று வருகிறது. எனினும், இன்று இயந்திரப் படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று நவீன வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள்.
- பாலை நிலத்தில் அன்று வழிப்பறி நடைபெற்றது. வழிப்பறி, இன்று சில இடங்களில் பரவலாக நடைபெறுகிறது.