சிறப்புடைய இடுகை

தொகாநிலைத் தொடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொகாநிலைத் தொடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொகாநிலைத் தொடர்கள்

2 மதிப்பெண்

1. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடர் ஆனது. 'சிரித்துப் பேசினாள்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

'சிரித்துப் பேசினாள்' என்பது 'சிரித்துச் சிரித்துப் பேசினாள்' என அடுக்குத்தொடர் ஆகும்.

2. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

  1. பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை
  2. நூலகம் சென்றார்-வினைப் பயனிலை
  3. அவர் யார்?- வினாப் பயனிலை.

3 மதிப்பெண்

கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீ எழும்பு!

மாமழை பெய்கையிலே 

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!

-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

  1. கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்
  2. காலையில் நீ எழும்பு! - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.
  3. மாமழை பெய்கையிலே - உரிச்சொற்றொடர்.
  4. மாம்பூவே கண்ணுறங்கு! - விளித்தொடர்
  5. பாடினேன் தாலாட்டு! - வினைமுற்றுத் தொடர்.
  6. ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! - அடுக்குத்தொடர்.