சிறப்புடைய இடுகை

தொகைநிலைத் தொடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொகைநிலைத் தொடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொகைநிலைத் தொடர்கள்

2 மதிப்பெண் 

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

  1. தண்ணீர் குடி- தண்ணீரைக் குடி.
    • தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  2. தயிர்க்குடம் - தயிரை உடைய குடம்.
    • அவள் தயிர்க்குடத்தை எடுத்து வந்தாள். 

3 மதிப்பெண்

தோட்டத்தில் மல்லிகைப்பூப் பறித்த பூங்கொடி வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டிற்கு வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

தொகைச்சொற்கள்:

  1. மல்லிகைப்பூ
    • இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
    • மல்லிகை ஆகிய பூ
  2. பூப்பறித்த
    • இரண்டாம் வேற்றுமைத்தொகை.
    • பூப்பறித்த-பூவைப் பறித்த
  3. ஆடுமாடுகள்
    • உம்மைத்தொகை.
    • ஆடுகளும் மாடுகளும்
  4. தண்ணீர்த்தொட்டி -
    • இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. 
    • தண்ணீரை உடைய தொட்டி.
  5. குடிநீர் நிரப்பினாள்
    • இரண்டாம் வேற்றுமைத்தொகை. 
    • குடிநீரை நிரப்பினாள்.
  6. குடிநீர்
    • வினைத்தொகை. 
    • குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்
  7. சுவர்க் கடிகாரம்
    • ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
    • சுவரின் கண் உள்ள கடிகாரம் 
  8. மணி பார்த்தாள்
    • இரண்டாம் வேற்றுமைத் தொகை. 
    • மணியைப் பார்த்தாள்