2 மதிப்பெண்
'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
- வேங்கை - மரம் (தனிமொழி)
- வேம்+கை =வேகின்ற கை (தொடர் மொழி)
- தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்ததால் இது பொதுமொழி ஆகும்.
'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்' - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
- உடுப்பதூஉம் உண்பதூஉம்-இன்னிசை அளபெடை
- செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிர் எழுத்துகள் அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.
3 மதிப்பெண்
'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.
வினைமுற்றுகள் - தொழிற் பெயர்கள்:
- அறிந்தது - அறிதல்
- அறியாதது - அறியாமை
- புரிந்தது - புரிதல்
- புரியாதது - புரியாமை
- தெரிந்தது - தெரிதல்
- தெரியாதது - தெரியாமை
- பிறந்தது - பிறத்தல்
- பிறவாதது - பிறவாமை