சிறப்புடைய இடுகை

முல்லைப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முல்லைப்பாட்டு

குறுவினா

பெற்றோர் வேலையில் இருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

கண்ணே மணியே கட்டிக்கரும்பே!
அழாதே கண்ணே அழாதே!
அம்மா உனக்காக மிட்டாய் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே கண்ணே அழாதே!

மாஅல் -பொருளும் இலக்கண குறிப்பு தருக
  1. மாஅல்-திருமால்
  2. மாஅல்-செய்யுளிசை அளபெடை

நெடு வினா

முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

முல்லைப்பாட்டு- நல்லோர் விரிச்சி கேட்டல்

பெருமழை பெய்தது

திருமால் பேருவம் எடுத்தது போன்று இருந்த மழைமேகம் கடல்நீரைப் பருகி, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் மாலைப்பொழுதில் பெருமழை பெய்தது.

தெய்வத்தை வழிபடல்

துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப் பொழுதில், முதிய பெண்கள் ஊர்ப்பக்கம் சென்று முல்லைப் பூக்களையும் நெல்லையும் தூவி, தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

நற்சொல் கேட்டல்

பசியால் வாடிய இளங்கன்றின் வருத்தத்தைக் கண்ட ஓர் இடைமகள், "புல்லை மேய்ந்து உன் தாய்மார் இப்போதே வந்து விடுவர், வருந்தாதே" என்றாள். இது கேட்ட முதுபெண்கள் தலைவியிடம், "நற்சொல்லை நாங்கள் கேட்டோம்" என்று கூறினர்.

முல்லைப்பாட்டு

பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

  1. அம்மாவும் அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
  2. உனக்குப் பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!

மாஅல் - பொருளும் இலக்கண குறிப்பும் தருக.

  1. பொருள்: மாஅல் - மால் - திருமால். பெருவடிவு கொண்டு உலகத்தை ஓரடியால் அளந்தவர்.
  2. இலக்கணக்குறிப்பு: மாஅல் -செய்யுளிசை அளபெடை

 5 மதிப்பெண் வினா

முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

திருமாலின் தோற்றம்

  • சக்கரம், சங்கினை ஏந்தியிருப்பவர்; திருமகளை மார்பிலே தாங்கியவர்; மூவுலகை அளந்தவர்.

மாலை நேரப்பெருமழை

  • திருமால் போன்ற மேகம் கடல் நீரைக் குடித்து, எழுந்து, மலை மீது மோதி மழை பெய்தது. 

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்

  • நெல்லுடன் முல்லை மலர்களைத்  தூவி, தொழுது நற்சொல் கேட்டு நின்றனர்.

ஆயர் குல மகளின் நற்சொல் கேட்டல்

  • இடையர் குலப் பெண் ஒருத்தி  இளம் கன்று அடைகின்ற துன்பத்தை நினைத்து, "உன் தாயர் இப்பொழுதே வந்துவிடுவர்" என்றாள். இதைக்கேட்ட முதுபெண்டிர் "நன்மை தரும் நற்சொல்லைக் கேட்டோம்" என்றனர்