சிறப்புடைய இடுகை

மிகவும் மெல்லக் கற்போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிகவும் மெல்லக் கற்போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மிகவும் மெல்லக் கற்போர்


கவிதை(4Marks)

ஓவியம் ஓவியம் -இது

காவியம் காவியம்

ஓவியம் ஓவியம்…- இது

அழியாத ஓவியம்

ஓவியம் ஓவியம்…- இது

அழியாத காவியம்

ஓவியம் ஓவியம்…- இது

அழியாத பாவியம்

 (நன்றி: சேட்டு மதார்ஸா ஈரோடு)

சான்றோர் வளர்த்த தமிழ்

(3 out of 1=4marks)

1.       சங்கப் புலவர்கள் தமிழ் வளர்த்தனர்
2.       சமணப் பள்ளிகள், மடங்கள் தமிழ் வளர்த்தன
3.       ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழ் வளர்த்தனர்
4.       திருவள்ளுவர், கம்பர் தமிழ் வளர்த்தனர்
5.       ாரதியார், பாரதிதாசன் தமிழ் வளர்த்தனர்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

1.       அரியானாவில் பிறந்தார்
2.       அரசுப் பள்ளியில் படித்தார்
3.       வானில் பறக்க ஆசைப்பட்டார்
4.       வானியல் படித்தார்
5.       விண்வெளியில் பறந்தார்
6.       விண்கலம் வெடித்து இறந்தார்

அரசுப் பொருட்காட்சி
1.       அரசுப் பொருட்காட்சி சென்றோம்
2.       பல்துறை அரங்குகளைப் பார்த்தோம்
3.       அழகாக இருந்தது
4.       கண்ணைக் கவர்ந்தது
5.       கருத்தைக் கவர்ந்தது
6.       அறுசுவை உணவு உண்டோம்
7.       மகிழ்வுடன் திரும்பினோம்

தமிழ்ச் சொல் வளம் (2 out of 1=4marks)

1.       தமிழ் சொல் வளம் நிறைந்தது
2.       எல்லாப் பொருளுக்கும் சொற்கள் உண்டு
3.       ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உண்டு
4.       அடி, கிளை, இலை, பூ, காய், கனி, இளம்பயிர் எனப் பல வகையான சொற்கள் உண்டு
5.       புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப புதிய சொல்லாக்கம் தேவை.

ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

தமிழ் வாரஇதழ் வெளியிடும் ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

1.       புதினங்கள்
2.       குறும் புதினங்கள்
3.       சிறுகதைகள்
4.       சினிமா
5.       விருதுகள்
6.       சிறப்புகள்

வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள்!

விலை ரூ.30/-

தமிழ்ப் பதிப்பகம், மதுரை.

 

அன்னமய்யா  ( 2 out of 1= 4marks)

1.       புதியவன் வந்தான்
2.       தண்ணீர் கேட்டான்
3.       அன்னமையா, நீச்சுத் தண்ணீர் கொடுத்தான்
4.       பழைய சோறு தந்தான்
5.       அன்பு காட்டினான்

6.       அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா

ஒருவன் இருக்கிறான்

1.       குப்புசாமி அனாதை
2.       வயிற்று வலியால் துடித்தான்
3.       வீரப்பன் குப்புசாமிக்கு உணவுவிட்டான்
4.       கடன் வாங்கி உதவி செய்தான்
5.       நோய் குணமாக கடவுளிடம் வேண்டினான்
6.       அளவற்ற அன்பு காட்டினான்.

தற்குறிப்பேற்ற அணி (4 out of 1=3 marks)

1.   தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
2.   போருழத் தெடுத்த
3.   காற்றில் கொடி அசைவது இயல்பு. கோவலனை வர வேண்டாம் என்று கை அசைத்ததாகக் கவிஞர் கூறுகிறார்.

தீவக அணி

1.       தீபம் போல நின்று பொருள் தருவது
2.       சேந்தன வேந்தன்
3.       சேந்தன என்னும் சொல் விளக்கு போல நின்று பொருள் தருகிறது

நிரல்நிறை அணி

1.   நிரல்நிறையாகப் பொருள் தருவது
2.       அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
3.       அன்புக்குப் பண்பு அறனுக்குப் பயன். நிரல் நிறையாக வந்துள்ளது.

தன்மை அணி

1.       இயல்புத் தன்மையைக் கூறுவது
2.       மெய்யில் பொடியும்
3.       கண்ணகியின் கலைந்த கோலத்தை இயல்பாகக் கூறுகிறது.

(4 out of 1=4 marks)

மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

சென்னை,

01-01-2023.

அன்புள்ள நண்பா,

நான் நலம். நீ நலமா? மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய். உன்னை வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

___________.

பெறுநர்

_________,

_________,

_________.

 

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

 புகார்க் கடிதம்

அனுப்புநர்

__________,

__________,

__________.

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

சென்னை.

அம்மா,

வணக்கம். முல்லை உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________.

இடம்: சென்னை

நாள்:01-01-2023

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

சென்னை.

இணைப்பு:

1.       உணவின் புகைப்படம்
2.       உணவுக் கட்டணச் சீட்டு

 

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந் நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்

__________,

__________,

__________.

 

பெறுநர்

தினமணி ஆசிரியர்

சென்னை.

அம்மா,

வணக்கம்.  தினமணி நாளிதழின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற எனது கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________

இடம்: சென்னை

நாள்: 01-01-2023.

பெறுநர்

தினமணி ஆசிரியர்,

சென்னை.

 

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுந்தடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

_________,

_________,

_________.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

சென்னை.

அம்மா,

வணக்கம். ங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்ல அச்சமாக இருக்கிறது. சரி செய்யும் படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________

இடம்: சென்னை

நாள்: 01-01-2023.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

சென்னை.

 

பா நயம் பாராட்டல் (4 marks)

திரண்ட கருத்து

பாடல்

2.   மோனை

முதல் எழுத்து ஒன்று போல் வருவது

3.   எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது

4.   இயைபு

கடைசி எழுத்து ஒன்று போல் வருவது

5.   சொல் நயம்

பாடல்

கூடுதலாகப் படிப்பவருக்கு… 7 கேள்விகள்

உங்கள் இல்லத்திற்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக

1.       மாமா வந்தார்

2.       வாங்க என்றேன்

3.       தண்ணீர் கொடுத்தேன்

4.       அமரச் சொன்னேன்

5.       இனிமையாகப் பேசினேன்

6.       அறுசுவை உணவு உண்டோம்

7.       ஊர் சுற்றினோம்

8.       அன்பில் கரைந்தோம்

9.       பிரிய மனமில்லை

10.   வழி அனுப்பி வைத்தேன்.

 

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் எந்திரம்

1.       தானே சிந்திக்கிறது

2.       சிறந்த முடிவை எடுக்கிறது

3.       குழந்தையைப் பராமரிக்கிறது 

4. வயதானவருக்குத் துணையாய் இருக்கிறது

5.       கற்பிக்கிறது

6.       மருத்துவம் பார்க்கிறது

7.       கடினமான, ஆபத்தான வேலைகளைச் செய்கிறது

8.       மனித உணர்வுகளை உணர்ந்து செயல்படுகிறது

9.       இது மனித இனத்திற்கு வரம் என்று நம்பலாம்

 

மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்

1.நாடும் மொழியும் நமது இரு கண்கள்

2.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

3.தேசிய விழாக்களைக் கொண்டாட வேண்டும்

4. தியாகிகளைப் போற்ற வேண்டும்

5.தேசிய மாணவர் படையில் சேர்ந்து சேவை புரிய வேண்டும்

6.பெரியோரை மதிக்க வேண்டும்

7. வயதானவருக்கு உதவ வேண்டும்

8. அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்.

 

கற்கை நன்றே கற்கை நன்றே

1.       மேரி பருத்திக்காட்டில் வேலை செய்யும் சிறுமி

2.       ஒருமுறை வெள்ளைக்காரச் சிறுமி மேரியிடம் உன்னால் படிக்க முடியாது என்றாள்.

3.       மேரி படிக்க விரும்பினாள்

4.       அங்கு பள்ளி இல்லை

5.        மிஸ் வில்சன் படிக்க அழைத்தார்

6.       வெள்ளைக்காரப் பெண்மணி பணம் அனுப்பினாள்

7.       மேரி 5 மைல் தூரம் நடந்து சென்று படித்தாள்

8.       பட்டம் பெற்றாள்

 

நிகழ்கலை வடிவங்கள்- அவை நிகழும் இடங்கள்- அவற்றின் ஒப்பனைகள்- சிறப்பும் பழமையும்- இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள்- அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன- இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

1.      நிகழ்கலை வடிவங்கள்

·        கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் காவடியாட்டம் முதலியன

2.       நிகழும் இடங்கள்: மக்கள் கூடும் இடங்கள்

3.       ஒப்பனைகள்: கலைஞர்களே செய்து கொள்வர்

4.       சிறப்பும் பழமையும்:

·        பண்பாட்டுக் கூறு

·        தொன்மையானது

5.       அருகி வரக் காரணம்:

·        வருமானம் குறைவு

·        மக்கள் ஆதரவு இன்மை

6.       வளர்க்க நாம் செய்ய வேண்டியவை:

·        ஆதரவு தர வேண்டும்

·        ஊக்கமளிக்க வேண்டும்

 

மங்கையராய்ப் பிறப்பதற்கே

1.   எம் எஸ் சுப்புலட்சுமி

·        இசைப் பேரரசி:

·        காற்றில் வரும் கீதம்

2.   பால சரஸ்வதி

·        பரதநாட்டிய கலையை உயர்த்தியவர்

3.   ராஜம் கிருஷ்ணன

·        களப்பணி செய்து சமூக சிக்கல்களை புதினமாக தந்தவர்

4.   கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

·        காந்தி இயக்கம்

·        உழுபவருக்கே நில உரிமை

5.   சின்னப் பிள்ளை

·        மகளிர்ய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை உயர்த்தியவர்

 

 

ராமானுஜர் நாடகம்

1.   ராமானுஜர், குரு பூரணரிடம் சென்றார்
2.   பூரணர் திருமந்திரத்தை உபதேசித்தார்
3.   பிறரிடம் கூறக்கூடாது என்று கட்டளையிட்டார்
4.   ராமானுஜர் பொதுமக்களைக் கூட்டினார்
5.   மந்திரத்தைக் கூறினார்
6.   இதை அறிந்த குரு, ராமானுஜரை வரவழைத்தார்
7.   காரணம் கேட்டார்
8.   அதற்கு ராமானுஜர், “நான் மட்டுமே நரகத்தை அடைவேன். மக்கள் அனைவரும் வீடு பேறு அடைவார்கள் என்றார்.
9.   குரு மகிழ்ந்தார்
10.  தன் மகனைச் சீடனாக ஒப்புவித்தார்.