சிறப்புடைய இடுகை

பெருமாள் திருமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருமாள் திருமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெருமாள் திருமொழி

 2 மதிப்பெண்

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

  1. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 
  2.  நோயாளி மருத்துவர்பால் கொண்டிருக்கும் இத்தகைய அன்பும் நம்பிக்கையுமே அவரை விரைவிலேயே குணமடையச் செய்யும். 

3 மதிப்பெண்

"மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

  1. உவமை: உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டலும், அது நன்மைக்கே என்று உணர்ந்த நோயாளி, மருத்துவரை நேசிப்பது போல.
  2. உவமை உணர்த்தும் செய்தி: வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னை போன்ற இறைவன், தமது விளையாட்டால் நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அடியவனாகிய நான், அவனது அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என்று குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார்.