2 மதிப்பெண்
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
பொருள்: ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.
3 மதிப்பெண்
நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
பூத்தொடுத்தல்
- மலர்களைத் தளரப் பிணைத்தால் தரையில் நழுவும்.
- இறுகப் பிணைத்தால் காம்புகள் முறியும்.
- அளவாய்ப் பிணைக்க வேண்டும்.
பூப்பறித்தல்
- மாரிக்கு கையால் பூப்பறித்தால் காம்பழுகிப் போகும்.
- விரலால் பூப்பறித்தால் வெம்பிவிடும்.
- அதனால், தங்கத்துரட்டி கொண்டு மலர் எடுத்தார்.