சிறப்புடைய இடுகை

அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அணி

 2 மதிப்பெண்

1. தீவக அணியின் வகைகள் யாவை?

தீவக அணி மூன்று வகைப்படும். அவை: 

  1. முதல் நிலைத் தீவகம் 
  2. இடை நிலைத் தீவகம் 
  3. கடை நிலைத் தீவகம்.

2). 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், இது நிரல்நிறை அணியாயிற்று.

3 மதிப்பெண்

கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக

தற்குறிப்பேற்ற அணி

அணி இலக்கணம்: இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு:

 'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 'வாரல்' என்பனபோல் மறித்துக் கைகாட்ட'

பாடலின் பொருள்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் என தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப் பொருத்தம்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையசைத்து 'இம்மதுரைக்குள் வரவேண்டா' என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.