சிறப்புடைய இடுகை

அன்னை மொழியே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னை மொழியே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அன்னை மொழியே 5 mark

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக


மேடைப்பேச்சு- அன்னை மொழியே 

ஆன்றோர்க்கும் தமிழ்ச் சான்றோர்க்கும் என் இனிய வணக்கம். தமிழ்த்தாயை வாழ்த்தாத புலவர் இல்லை. 

தமிழ்த்தாய்க்கு ஆர்ப்பரிக்கின்ற கடலே ஆடை. பாரதமே அழகு முகம். தென்னிந்தியாவே நெற்றி. தமிழகமே அதில் மணக்கும் பொட்டு. அந்தப் பொட்டின் நறுமணம் போல உலகமே இன்புற எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்று விளங்கும் தமிழ்த் தாயே! உன் சீரிளமைத் திறம்வியந்து வாழ்த்துகிறோம் என்று மனோன்மணீயம் சுந்தரனார் வாழ்த்துகிறார்.

அழகு நிறைந்த செந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! தென்னனின் மகளே! திருக்குறளின் பெருமைக்கு உரியவளே! குமரியில் ஆட்சி செய்த பேரரசே! எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலையாக இருப்பவளே! உன்னைத் தலைபணிந்து வாழ்த்துகிறோம் என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்த்துகிறார்.

அன்னை மொழியே

2 மதிப்பெண் வினா

"மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  1. சீவக சிந்தாமணி 
  2. வளையாபதி 
  3. குண்டலகேசி

3 மதிப்பெண் வினாக்கள்

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

  1. அன்னை மொழி
  2. அழகு நிறைந்த செந்தமிழ்
  3. பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி
  4. குமரிக் கண்டத்தை ஆட்சி செய்தவள்
  5. பாண்டிய மன்னனின் மகள்
  6. திருக்குறளின்  பெருமைக்கு உரியவள்
  7. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள். 
  8. இந்த நினைவுகள் யாவும் பொங்கி எழுவதால் தலைபணிந்து வாழ்த்துகிறோம்

 5 மதிப்பெண் வினா

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக

ஆன்றோர்களே, தமிழ்ச் சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்..!

தமிழ்த்தாய்
  1. கடலை ஆடையாக அணிந்தவள். 
  2. பாரதம் அவளது அழகு முகம். 
  3. திராவிடநாடு அவளது நெற்றி.
  4. நெற்றியில் உள்ள திலகம் போல தமிழ் எங்கும் மணக்கிறது 
என்று மனோன்மணியம் சுந்தரனார் வாழ்த்துகிறார்.

  1. அன்னை மொழி
  2. அழகு நிறைந்த செந்தமிழ்
  3. பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி
  4. குமரிக் கண்டத்தை ஆட்சி செய்தவள்
  5. பாண்டிய மன்னனின் மகள்
  6. திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
  7. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.
என்று பெருஞ்சித்திரனார் வாழ்த்துகிறார்.

எனது பேச்சைக் கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்!

அன்னை மொழியே மனப்பாடப் பாடல்

அன்னை மொழியே 
திரும்பத் திரும்ப மனனம் ஆகும் வரை கேட்கவும்.  முதல் எட்டு வரிகள் மட்டுமே மனப்பாடப் பாடல்.