சிறப்புடைய இடுகை

கம்பராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கம்பராமாயணம்

 2 மதிப்பெண்

உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' 

காலதூதர் கையில் 'உறங்குவாய் உறங்குவாய்'

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

அ) "உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!" என்று சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆ) "காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லை பிடித்து, காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக" என்று உறங்கச் சொல்கிறார்கள்.

8 மதிப்பெண்

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்' என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. அன்பும் பண்பும் குணச்சித்திரம் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்கடை போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் சான்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கவி காட்டுகிறது. தண்டலை மயில்கள் ஆட....

இவ்வுரையைத் தொடர்க!

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்

ஆன்றோர்களே, கல்வியில் சிறந்த சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

  1. வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மேகங்கள் மத்தளம் கொட்ட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்ற, குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்கும் மருதநிலக் காட்சியை நீரலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. 
  2. இராமனுடைய மேனியில் பகலவனின் ஒளி கரைகிறது.  மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று உவமை சொன்ன கம்பர் இறுதியில் அழியாத அழகு உடையான் என்று முடிக்கிறார். 
  3. பெரிய யானைப்படை கொண்ட பரதனை, கங்கை ஆற்றைக் கடந்து போகவிட்டால் வேடன் ஆகிய என்னை இறந்திருக்கலாமே என உலகத்தார் பழி சொல்ல மாட்டார்களா? என்று குகன் எண்ணுகிறான்.
  4. உறங்குகின்ற கும்பகருணனே, உம்முடைய பொய்யான வாழ்வு இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. இனிக் காலதூதர் கையில் படுத்து உறங்குவாயாக என்று கும்பகருணனை எழுப்புகிறார்கள்.
இவை இயற்கைக் காட்சிகளைச் சந்த நயத்தோடு வருணிப்பதில் கம்பர் சிறந்தவர் என்பதற்குச் சான்று பகர்கின்றன.