சிறப்புடைய இடுகை

திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருக்குறள் இயல் 6

 2 மதிப்பெண்

1. கரப்பிடும்பை இல்லார்' இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்.

2. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

  1. தஞ்/சம் - நேர் நேர் - தேமா
  2. எளி/யர் - நிரை நேர் - புளிமா
  3. பகைக்/கு - (நிரை நேர்) - நிரைபு - பிறப்பு (வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீராகக் கருதி)

3). வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

4). பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

அ) உழைத்ததால் கிடைத்த ஊதியம் 

ஆ). உழைத்ததால் கிடைத்த ஊதியமே, பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.

3 மதிப்பெண்

வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

அமைச்சு 

  1. ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார். 
  2. மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார்.
  3. இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் பெற்றிருப்பவரே அமைச்சர் ஆவார்.
  4. ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார். 

2). பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

  1. சுற்றத்தாருடன் ஒருவர், அன்பு இல்லாமலும், பொருந்திய துணை இல்லாமலும், வலிமை இல்லாமலும், இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
  2. மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் அன்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

திருக்குறள் மனப்பாடப் பாடல்

திருக்குறள் மனப்பாடப் பாடல் 

திருக்குறள்

 2 மதிப்பெண்

1. நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் அண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.

2). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். - இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை

3). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்து போன்று - உயிரினும் ஓம்பப்படும்.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

விடை:

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப் படும்.

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

4). எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா மலர்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு

விடை:

அ). கூவிளம் தேமா மலர்

3 மதிப்பெண்

1. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக. 

இக்குறளில் 'உவமை அணி' பயின்று வந்துள்ளது.

அணியிலக்கணம்: ஒன்றை மற்றொன்றுடன் ஒப்புமைப்படுத்தும் போது, 'உவமை' ஒரு தொடராகவும், 'பொருள்' ஒரு தொடராகவும் அமைந்து இடையில் 'உவம உருபு' இடம் பெறுவது உவமை அணியாகும்.

விளக்கம்:

உவமை: வேலொடு நின்றான் இடுவென் றது

பொருள்: கோலொடு நின்றான் இரவு

உவம உருபு: போலும்

செங்கோலைக் கையில் ஏந்தி அரசன், குடிமக்களிடம் பொருள் கேட்பது, 'கள்வன்' வேலினைக் கையிலேந்தி வழிப்பறி செய்வதைப் போன்றது.

2). கவிதையைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம்

தவித்தபடி வெளிநீட்டும் கை

கரையில் கைபேசி படமெடுத்தபடி

கண்ணோட்டம் இல்லாத கைபேசிகள்!

காண்போர் யாவரும் கோமாளிகள்!!

விரைந்து சென்று உதவிடுவோம்!

விலையில்லா உயிரதைக் காத்திடுவோம்!!