2 மதிப்பெண்
1. அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அமர்+த்(ந்)+த்+ஆன்
அமர் - பகுதி
த் - சந்தி
ந் - விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
2). இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ இருக்கிறதே ...சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே !மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.
- மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? - அறியா வினா
- மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? - ஐய வினா
3 மதிப்பெண்
முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை
இன்மை புகுத்தி விடும் - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
- இக்குறட்பாவில் 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' அமைந்துள்ளது.
- இலக்கணம்: பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' ஆகும்.
- விளக்கம்: "முயற்சி செல்வத்தைத் தரும். முயற்சி இல்லாமை வறுமையை உண்டாக்கும்" என்பது இக்குறட்பாவில் பொருளாகும். ஆற்று நீரின் போக்கைப் போல இக்குறட்பாவில் தொடக்கம் முதல் இறுதிவரை நேராக வைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால், இஃது ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆகும்.