சிறப்புடைய இடுகை

ஜெயகாந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயகாந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜெயகாந்தம்

 2 மதிப்பெண்

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. - இத்தொடரை இரு தொடர்களாக்குக.

தனி வாக்கியங்கள்:

  1. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
  2. நான் எழுதுவதற்கு உரிய காரணம் உண்டு.

3 மதிப்பெண்

ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் 'தர்க்கத்திற்கு அப்பால்' கதைமாந்தர் வாயிலாக விளக்குக.

தர்க்கத்திற்கு அப்பால்...

அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. அதைக் கொண்டாட விரும்பினார். தன்னிடம் ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே இருந்தது. ஊர் திரும்ப முக்கால் ரூபாய் ஒதுக்கினார். இரண்டு அணாவில் காபி அருந்தினார். ஊர் திரும்பவதற்கு வைத்திருந்ந பன்னிரண்டணா போக கையில் இருக்கும் இரண்டு அணாவை 'ஒரு ராஜாவைப் போல' செலவு செய்ய நினைத்தார். 

பார்வையற்ற பிச்சைக்காரனின் அலுமினிய பாத்திரத்தில் அந்த இரண்டணாவை இட்டு மகிழ்ந்தார். டிக்கெட் கவுண்டரில் பன்னிரண்டணா கொடுத்து டிக்கெட் கேட்டார். டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு அணாவுக்கு யாசிக்கும் நிலை வந்ததை எண்ணி வாழ்க்கையின் தர்க்கத்தை உணர்ந்தார். பிச்சைக்காரனின் அலுமினியப் பாத்திரத்தில் தான் இட்ட இரண்டணா தன்னுடையது என்றும், தனக்குச் சொந்தமில்லை என்றும், ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக் கொண்டால் என்ன என்றும் தனக்குள் தர்க்கம் புரிந்தார். 

ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக்கொண்டார். "பார்வையற்ற என்னை ஏமாற்றாதே" என்ற பிச்சைக்காரனின் சொல்லில் நெருப்புக்கட்டியைக் கையில் எடுத்தது போல் உணர்ந்தார்; அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் உதறினார்; "தெரியாமல் எடுத்து விட்டேன்" என்று குறுகினார்.