8 மதிப்பெண் வினா
'புயலிலே ஒரு தோணி' கதையில் இடம்பற்றுள்ள வருணனைகளும் அடுக்கு தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
புயலில் தோணி படும்பாடு
வருணனைகள்
கொளுத்திக் கொண்டிருந்த வெயில் இமை நேரத்தில் மறைந்து விட்டது; புழுங்கிற்று. அலைகள் எண்ணெய்க் கசிவைப் போல் மொழுமொழுவென நெளிந்தன. காற்றையே காணோம். ஒரே இறுக்கம்.
கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன. வானம் உடைந்து கொட்டு கொட்டென்று வெள்ளம் கொட்டியது. சூறாவளியும் மழையும் காற்றும் கூடிக் கலந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன. தொங்கான் அப்படியும் இப்படியுமாய்த் தாவிக் குதித்து விழுந்து திணறித் தத்தளிக்கிறது.
அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும்
எலும்புகள் முறிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலி. இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல் மழை புயல் வானம்... அருவியருவி, உப்பருவி, கடலருவி.
கடல், வெறிக் கூத்தாடுகிறது. நடுநடுங்கித் தாவித்தாவி குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது.
முகத்தில் வெள்ளம், உடலில் வெள்ளம், கால் கைகளில் வெள்ளம். உடை, உடலை இறுக்கி இறுக்கி ரம்பமாய் அறுக்கிறது. மரத்தூண், கல்தூண், இரும்புத்தூண், உயிர்த்தூண். தொங்கான் தாவி விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு, கும்மிருட்டு, குருட்டிருட்டு, சிலுசிலு மரமரப்பு, ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங். மூடைகள் சிப்பங்கள் நீந்தியோடி மறைகின்றன. தாவிக்குதித்து நொறுங்குகிறது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடுகிறது. கடல் அலை அடிக்கிறது...
என்னயிது! சூரிய வெளிச்சம்! சூரியன் சூரியன் சூரியன்...