2 மதிப்பெண்
'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குற்றி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
- இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை.
- எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்துவந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது.
- இது விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட, விருந்தோம்பல் பண்பே இன்றியமையாதது என்பதைக் காட்டுகிறது.
3 மதிப்பெண்
முல்லை நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?
முல்லை நில உணவுப் பொருட்கள்:
வரகு, தினை, சாமை, முதிரை, மூங்கில் அரிசி, நெய், பால், வெள்ளாட்டு இறைச்சி முதலியன.(ஏதேனும் நான்கு மட்டும் எழுதினால் போதும்)
மருத நில உணவுப்பொருட்கள்:
செந்நெல், வெண்ணெல், அவல், பழைய சோறு, பெட்டைக் கோழிப் பொரியல், நண்டுக்குழம்பு, பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், பீர்க்கங்காய், வள்ளிக்கிழங்கு, நுங்கு முதலியன.(ஏதேனும் நான்கு மட்டும் எழுதினால் போதும்)
8 மதிப்பெண்
ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
ஆற்றுப்படுத்துதல் அன்றும் இன்றும்
அன்றைய ஆற்றுப்படுத்துதல்
- இந்திரனின் அமிழ்தமே கிடைத்தாலும் 'இனிது' எனத் தனித்து உண்ணமாட்டார். பகிர்ந்து உண்பார்.
- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்பார்.
- கதவை அடைத்துவிட்டுத் தாமே உண்பதை இழிவு எனக் கருதுவார்.
- பொருள் இல்லாத நிலையிலும், இருப்பதைப் பகிர்ந்து உண்பார்.
- பகைக்கு அஞ்சார்; பாணரின் வறுமைக்கு அஞ்சுவார்
- "இன்ன வள்ளலிடம் சென்றால் இன்ன பொருளைப் பெறலாம், வருந்தாதே!" என்று கூறி ஆற்றுப்படுத்துவார்.
இன்றைய வழிகாட்டுதல்
- உறவினர்களைக் காணும்போது உடல்நலம் பற்றி விசாரிக்கின்றனர்; ஆறுதல் கூறுகின்றனர்.
- வறுமையில் வாடும் மாணவச் செல்வங்கள் மேற்படிப்பைத் தொடர இலவசக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நோக்கி வழிகாட்டுகின்றனர்.
- மனக் கவலையிலிருந்து விடுபட இறைபக்தி, யோகா, மனவளக்கலை, மனநல மருத்துவம் போன்றவற்றை நோக்கி வழிகாட்டுகின்றனர்.