சிறப்புடைய இடுகை

3 மதிப்பெண் வினாக்கள்(10) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3 மதிப்பெண் வினாக்கள்(10) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலக்கணம் 3 மதிப்பெண் வினாக்கள் (10)

 இலக்கணம் 3 மதிப்பெண் வினாக்கள்

1.‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்றுகள் – தொழிற் பெயர்கள்:

1. அறிந்தது – அறிதல்

2. அறியாதது – அறியாமை

3. புரிந்தது – புரிதல்

4. புரியாதது – புரியாமை

5. தெரிந்தது – தெரிதல்

6. தெரியாதது – தெரியாமை

7. பிறந்தது – பிறத்தல்

8. பிறவாதது – பிறவாமை