2 மதிப்பெண்
'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.
- இறடி- தினை; பொம்மல்- சோறு.
- 'தினைச்சோற்றைப் பெறுவீர்கள்'
3 மதிப்பெண்
கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
"பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; அசோக மரங்களை உடைய பாதை- பின் மூங்கில்கள் நிறைந்த பாதையில் சென்று சிற்றுரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், ' நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர். மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்".