சிறப்புடைய இடுகை

பாவகை அலகிடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவகை அலகிடுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாவகை, அலகிடுதல்

 2 மதிப்பெண்

1. குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குறள் வெண்பாவின் இலக்கணம்:

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதல் அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

எடுத்துக்காட்டு:

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

கலவைத் தொடர்:

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.

3 மதிப்பெண்

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

  1. அளவடிகளைப் பெற்று வரும்
  2. இயற்சீர் பயின்று வரும். பிற சீரும் வரும். ஆனால், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள் வாரா
  3. ஆசிரியத் தளைகள் பயின்று வரும். பிற தளைகளும் கலந்து வரும்
  4. குறைந்தது மூன்று அடிகளாகவும், புலவரின் மனக்கருத்திற்கேற்பப் பல அடிகளைப் பெற்றும் வரும்
  5. அகவலோசை பெற்று வரும்
  6. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.