சிறப்புடைய இடுகை

ஒரு மதிப்பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு மதிப்பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சரியான விடையைத் தேர்வு செய்க

 

சரியான விடையைத் தேர்வு செய்க.

இதிலிருந்து எட்டு வினாக்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

1.மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது____

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

2.காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது_____

சருகும் சண்டும்

3.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-________

எம்+தமிழ்+நா

4.‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது -தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-_______

பாடல், கேட்டவர்

5.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_________

மணி வகை

6.“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?_____

மோனை, எதுகை

7.பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1.       ஒவ்வோர்ஆண்டும் ஜூன் 15 உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

2.       காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே

3.       காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

செய்தி 1,3 ஆகியன சரி

8.”பாடு இமிழ் பனிக்கடல் பருகிஎன்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?_______

கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

9.‘பெரிய மீசை சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?_______

அன்மொழித்தொகை

10.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

கொண்டல்-கிழக்கு

கோடை-மேற்கு

வாடை-வடக்கு

தென்றல்-தெற்கு

11.பின்வருவனவற்றுள் முறையான தொடர்-__

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

12.சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்திஎன்னும் அடியில் பாக்கம் என்பது-_____

சிற்றூர்

13.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-_____

வேற்றுமை உருபு

14.காசிக்காண்டம் என்பது-______

காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

15.விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-______

இன்மையிலும் விருந்து

16.உனதருளே பார்ப்பன் அடியேனே’-யாரிடம் யார் கூறியது?-______

இறைவனிடம் குலசேகராழ்வார்

17.தலைப்புக்கும் குறிப்புக்கும் ொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது

 தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

18.பரிபாடல் அடியில்விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?____

 வானத்தையும் பேரொலியையும்

19.குலசேகர ஆழ்வார்வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே_____

 பால் வழுவமைதி, திணை வழுவமைதி

20.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?____

 இலா

21.மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி____

 சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

22.ருந்துணை என்பதைப் பிரித்தால்_____

 அருமை+துணை

23.இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______வினா.

 அறியா

“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது______விடை

 சுட்டு

24.அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?______

கல்வி

25.இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்______

மன்னன் இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _____

இறைவன்

26.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

27.ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?_______

ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

28.மலர்கள் தரையில் நழுவும். எப்போது?_____

தளரப் பிணைத்தால்

29.கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?________

கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?

30.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?______

அங்கு வறுமை இல்லாததால்

31.ரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க

உழவு, ஏர், மண், மாடு

32.‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

திருப்பதியும் திருத்தணியும்

33.‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-

நெறியோடு நின்று காவல் காப்பவர்

34.இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்_______

வலிமையை நிலைநாட்டல்

35.தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது______

சிலப்பதிகாரம்

36.மேன்மை தரும் அறம் என்பது______

கைமாறு கருதாமல் அறம் செய்வது

37.‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது______

இடையறாது அறப்பணி செய்தலை

38.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்____

அதியன், பெருஞ்சாத்தன்

39.காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்____

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது

40.சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்_____

அகவற்பா

41.“இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்…”-இவ்வடிகளில் கற்காலம் என்பது

தலையில் கல் சுமப்பது

42.சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

43.பூக்கையைக் குவித்து பூவே புரிவொடு காக்க என்று______ வேண்டினார்

கருணையன் எலிசபெத்துக்காக

44.வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி

உருவகம்

45.கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:

சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.