சிறப்புடைய இடுகை

கோபல்லபுரத்து மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோபல்லபுரத்து மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோபல்லபுரத்து மக்கள்

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

கோபல்லபுரத்து மக்கள்

பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் முன் காட்சியாகிறது.

புதியவனின் தோற்றம் 

புளிய மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவனை அன்னமய்யா கண்டான். அவன் வயோதிகன் போலவும் சந்நியாசி போலவும் இருந்தான். ஆனால், அவன் வாலிபன்.

அன்னமய்யாவின் அரவணைப்பு

அன்னமய்யா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அலுப்புத் தீர்ந்தவுடன் அந்த வாலிபன், குடிக்கத் தண்ணீர் கேட்டான். அன்னமய்யா, "அருகில் அருகு எடுத்துக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து நீச்சுச் தண்ணீர் வாங்கி வரட்டுமா?" என்றான்.

வாலிபன் எழுந்திருக்க ஒத்தாசையாகக் கையை நீட்டினான். தோளைப் பிடித்து நடக்கும்படி வேண்டினான்.

அன்னமய்யா அளித்த ஜீவ ஊற்று

வேப்ப மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த கலயத்துக் கஞ்சியின் நீத்துப் பாகத்தை வடித்துக் கொடுத்தான். உட்கார்ந்து குடிக்கச் சொன்னான். சோற்றின் மகுளியை வார்த்துக் கொடுத்தான். வயிறு நிறையப் பாலைக் குடித்து மடியிலே தூங்கும் குழந்தையின் முகத்தைத் தாய் பார்ப்பது போல அன்னமய்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பெயர்ப்பொருத்தம்

வாலிபனின் சிறு தூக்கம் முடியும் வரை காத்திருந்தான். எழுந்த வாலிபன், நன்றி கலந்த புன்னகை காட்டினான். அன்னமய்யா வாலிபனிடம், "உங்கள் ஊர்ப்பெயர் என்ன? எங்க இருந்து வர்றீங்க? எங்க போகணும்?" என்று அன்புடன் கேட்டான். பதிலுக்கு அந்த வாலிபன், "உன் பெயர் என்ன?" என்று கேட்டான்.  

"அன்னமய்யா " 

"அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா. என்னே பெயர்ப் பொருத்தம்!" என்று எண்ணிக் கொண்டான்.