சிறப்புடைய இடுகை

கேட்கிறதா என் குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேட்கிறதா என் குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கேட்கிறதா என் குரல்

குறுவினா 

'நமக்கு உயிர் காற்று காற்றுக்கு வரம் மரம்- மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

  1. மரம் - மனிதருக்கு வரம் 
  2. காற்று - உயிர் வாழப் போற்று

சிறுவினா

உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்.... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்.... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

நீர் - தன் வரலாறு 

  1. அமிழ்தாக நான் 
  2. ஆற்றலாக நான் 
  3. உணவாக நான் 
  4. உயிராக நான் 
  5. உருமாறும் நான் 
  6. இலக்கியத்தில் நான் 
  7. பண்பாட்டில் நான் 
  8. பல பெயர்களில் நான் 
  9. வளம் சேர்ப்பேன் நான் 
  10. மனிதனால் மாசடையும் நான் 

சோலைக்காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக்காற்று: நண்பா, நலமா? 

மின்விசிறிக் காற்று: நலம் நண்பா. நீ எப்படி இருக்கிறாய்? ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இப்போதுதான் என்னைப் பார்க்க உனக்கு நேரம் கிடைத்ததா? 

சோலைக்காற்று: ஊரெல்லாம் உலா வருவது தான் எனது பொழுதுபோக்கு. அதுதான் என்றுமே எனக்கு மகிழ்ச்சி. ஆனால் ...

மின்விசிறிக் காற்று: என்ன ஆயிற்று உனக்கு? ஏன் கவலைப்படுகிறாய்?

சோலைக்காற்று: எங்கு பார்த்தாலும் புகைமூட்டம். வாகன நெரிசல். வானை முட்டும் தூசித் துகள்கள். குளிர்ச்சியையும் நறுமணத்தையும் சுமந்து திரிந்த எனக்கே இன்று மூச்சு முட்டும்படி செய்து விட்டார்கள் இந்த மனிதர்கள்! 

மின்விசிறிக் காற்று: நாம் இன்றி இவர்களுக்கு வாழ்வில்லை. இதை எப்போதுதான் இவர்கள் உணர்வார்களோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

கேட்கிறதா என் குரல்

 

2 மதிப்பெண் வினாக்கள்

"நமக்கு உயிர் காற்று 

காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்"

- இது போன்ற உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

1). மரம் தரும் உயிர்வளி. 

     மனிதர் வாழ ...

     மரம் வளர்ப்பதே ஒரே வழி.

2). பட்டம் கூட முட்டும்!

     பாழ்படுத்தாதீர்..!

     நித்தம் மூச்சு முட்டும்!

3 மதிப்பெண் வினாக்கள்

உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் 'காற்று' தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

  1. அமிழ்தாக நான்
  2. ஆற்றலாக நான்
  3. இலக்கியத்தில் நான்
  4. உருமாறும் நான் 
  5. சடங்குகளில் நான் 
  6. பல பெயர்களில் நான்

2). சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் எழுதுக.

சோலைக் காற்று: நண்பா, எப்படி இருக்கிறாய்?

மின்விசிறிக் காற்று: மனிதர்களின் வியர்வை துடைத்துக் களைப்பைப் போக்குகிறேன். ஆனால், அறைக்குள் முடங்கிக் கிடக்கிறேன் நண்பா. நீ நலமா?

சோலைக் காற்று: நான் மரம்செடிகொடிகளைத் தழுவி, தென்றலாய் வீசி வருகிறேன். ஆனால் மனிதர்கள் நம்மை மாசுபடுத்தி வருகின்றனர்

மின்விசிறிக் காற்று: நானும் அதுகுறித்து கவலை அடைகிறேன்.

சோலைக் காற்று: காற்று மாசுபாடு பேரழிவு தரும் என்பதை எப்போது உணர்வார்களோ? நான் சென்று வருகிறேன் நண்பா.