சிறப்புடைய இடுகை

காசிக்காண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசிக்காண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காசிக்காண்டம்

2 மதிப்பெண்

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

  1. வாருங்கள்... வாருங்கள்... உங்களைக் கண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 
  2. உட்காருங்கள்! முதலில் சிறிது நீர் பருகுங்கள். 
  3. நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தது, நான் செய்த பெரும்பேறு.

3 மதிப்பெண்

  • புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
  •  திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும்போது புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. 

இப்படியாகக் காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுதுக.

  1. ஓரளவு தெரிந்தவர், உற்றார் உறவினர், நண்பர்களை மட்டும் விருந்தினராக ஏற்கின்றனர். 
  2. இல்லங்களில் நடைபெற்ற விருந்தோம்பல் இன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளது. 
  3. சில திருமண விழாக்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் வழி அனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே செய்கின்றனர்.

8 மதிப்பெண்

உங்கள் இல்லத்திற்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.

விருந்தோம்பல்

வரவேற்றேன்

எங்கள் ஊர்ப் பொங்கல் விழாவிற்கு என் மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன்; அவர் வருகைக்காக வாயிலில் விழி வைத்துக் காத்திருந்தேன்; மதியவேளை வந்தது; அவரும் வந்தார். "வாங்க மாமா" என்று வாய் நிறைய அழைத்தேன்; முகம் மலர்ந்தேன்; கைபிடித்து உள்ளே கூட்டிச் சென்றேன்; ஆற அமர நாற்காலி தந்தேன்; தாகம் தீரத் தண்ணீர் தந்தேன்; வியர்வை நீங்க விசிறி போட்டேன்; உள்ளம் மகிழ்ந்து உறவுகளை விசாரித்தேன்; ஓய்வெடுக்க அறையைக் காட்டினேன்.

விருந்து உண்டோம்

 சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், வாழையிலையில் சாம்பார், ரசம், அப்பளம், பாயாசம், அவித்த முட்டை, மாங்காய் ஊறுகாய், முருங்கைக் கீரை, மோர் மணக்க மணக்க, மாமா முகம் அறிந்து விருந்து வைத்தேன்; கை அலம்பக் குவளைத் தண்ணீரும் கை துடைக்கத் துண்டும் கொணர்ந்தேன். 

உலா வந்தோம்

பின்னர், ஊர் நந்தவனத்திற்குச் சென்றோம்; காலாற நடந்தோம்; களிப்புடன் பேசினோம்; பூ மரம் செடி கொடிகளைக் கண்டோம்; களித்தோம்.

பிரிய மனமில்லை

தலைவாழை இலையில் பச்சைநெல் சோறும் நாட்டுக்கோழி குழம்பும் பொறித்த மீனும் அன்பு குழையக் குழையப் பரிமாறினேன். உண்டு மகிழ்ந்த மாமா, நன்றி கூறிப் புறப்பட்டார். ஊர் எல்லைவரை வந்து, மாம்பழ மூட்டையுடன் வழியனுப்பி வைத்தேன். இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்தோம்.