2 மதிப்பெண்
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன
-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
- சரியான தொடர்கள்:
- ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
- ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
- பிழையான தொடர்:ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
- பிழைக்கான காரணம்:தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.
3 மதிப்பெண்
'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- நெல்நாற்று நடப்பட்டுள்ளது
- மாங்கன்று நடப்பட்டுள்ளது
- தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது
- வாழைக்குருத்து வளர்ந்துள்ளது
- சோளப் பைங்கூழ் வளர்ந்துள்ளது.
8 மதிப்பெண்
தமிழின் சொல்வளம் குறித்தும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
தமிழ்மன்றத்திற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
தமிழ்ச்சொல் வளம்
தமிழ்மொழி கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் கன்னித் தமிழாய் வளர்ந்து வருகிறது. தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன.
பயிர் வகைச் சொற்கள்
- தாவரத்தின் அடிப்பகுதியை அதன் மென்மை வன்மை குறித்துத் தாள், தண்டு, கோல், தட்டை, தூறு, கழி, கழை, அடி எனப் பகுத்துள்ளனர்.
- அடியில் இருந்து பிரிந்து செல்லும் மேல்நோக்கிய பிரிவுகளுக்கு கவை, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு எனப் பாகுபாடு செய்துள்ளனர்.
- இலையின் வகைகளை அதன் மென்மை வன்மை பற்றி இலை, தாள், தோகை, ஓலை என்றும் காய்ந்த இலையைச் சருகு என்றும் காய்ந்த தோகையைச் சண்டு என்றும் பாகுபடுத்தி உள்ளனர்.
- பூவின் மலரும் நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் எனப் பகுத்துள்ளனர்.
- இவ்வாறே பிஞ்சு வகைகள், குலை வகைகள், காய்கனி வகைகள், மணி வகைகள், இளம்பயிர் வகைகள், இளம்தளிர் வகைகள் என ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன.
இதனால், தமிழ் சொல்வளம் உடையது என்பதும், தமிழ்நாடு பொருள்வளம் உடையது என்பதும் தெளிவாக விளங்குகிறது.
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
- அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பப் புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.
- பிற மொழிகளில் உள்ள சிறந்த சிந்தனைகள், அறிவியல் கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.
- இணையத்தள உலகை ஆளும் மொழியே வாழும்.
- எனவே புதிய சொல்லாக்கத்திற்கான தேவை இருக்கிறது என்று கூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன்.