ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக
சூழல்-வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
உரைநடையின் அணிநலன்கள்
(வெளிநாட்டிலிருந்து பாரதி வீட்டிற்கு மலர் வந்திருக்கிறார். பாரதிக்கும் மலருக்குமான உரையாடல் இது)
பாரதி: வாங்க மலர். எப்படி இருக்கிறீர்கள்?
மலர்: நலமுடன் இருக்கிறேன். நீங்கள் நலமா? என்ன படிக்கிறீர்கள்?
பாரதி: நலம். தமிழ் இலக்கியம் படித்து இருக்கிறேன். நீங்கள்?
மலர்: ஆங்கிலத்தில் இலக்கியம் படித்து இருக்கிறேன். எனக்குத் தமிழைப் பேச மட்டுமே தெரியும். தமிழில் எழுதத் தெரியாது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கூறுங்களேன்.
பாரதி: தமிழ் இலக்கியம் கடல் போன்றது. தற்போது உரைநடையைப் பற்றி மட்டும் உங்களுக்குக் கூறுகிறேன், கேளுங்கள்.
மலர்: மிக்க மகிழ்ச்சி!
பாரதி: "திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்துவைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்". இது உவமை.
மலர்: ஆகா... என்னே கற்பனை!
பாரதி: முகநிலவில் வியர்வை முத்துக்கள் துளிர்த்தன. இது உருவகம்.
மலர்: மிக இனிமை. ஆவலாக இருக்கிறதே!
பாரதி: "ஊர்கூடிச் செக்குத் தள்ள முடியுமா? புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை." இது இணை ஒப்பு
"சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும்." இது இலக்கணை.
மோனையும் எதுகையும்
"கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணம் கமழும்; கோலமாமயில் தோகை விரித்தாடும்.
"இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?". இது முரண்படு மெய்ம்மை
'கலப்பில்லாத பொய்'. இது முரண்.
"குடிசைகள் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம் ; பசித்த வயிறுகள் ஒருபக்கம் ; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்". இது எதிரிணை இசைவு.
மலர்: மிகவும் சுவையாக இருக்கிறது. தமிழ் உரைநடையின் சிறப்புகளைப் பற்றி உரையாடியதற்கு நன்றி!