2 மதிப்பெண்
பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
- பாசவர் - வெற்றிலை விற்பவர்
- வாசவர் - ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
- பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர்
- உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்
3 மதிப்பெண்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர்
பட்டினும்
தூசும்
துகிரும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பகர்வனர்
நகர வீதியும்
ஈ). காருகர் - பொருள் தருக.
காருகர் - நெய்பவர்
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம், அகில்.
5 மதிப்பெண்
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.