சிறப்புடைய இடுகை

கவிதைப் பேழை 5 அல்லது 8 மதிப்பெண்கள் (8) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைப் பேழை 5 அல்லது 8 மதிப்பெண்கள் (8) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அன்னை மொழியே 5 mark

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக


மேடைப்பேச்சு- அன்னை மொழியே 

ஆன்றோர்க்கும் தமிழ்ச் சான்றோர்க்கும் என் இனிய வணக்கம். தமிழ்த்தாயை வாழ்த்தாத புலவர் இல்லை. 

தமிழ்த்தாய்க்கு ஆர்ப்பரிக்கின்ற கடலே ஆடை. பாரதமே அழகு முகம். தென்னிந்தியாவே நெற்றி. தமிழகமே அதில் மணக்கும் பொட்டு. அந்தப் பொட்டின் நறுமணம் போல உலகமே இன்புற எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்று விளங்கும் தமிழ்த் தாயே! உன் சீரிளமைத் திறம்வியந்து வாழ்த்துகிறோம் என்று மனோன்மணீயம் சுந்தரனார் வாழ்த்துகிறார்.

அழகு நிறைந்த செந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! தென்னனின் மகளே! திருக்குறளின் பெருமைக்கு உரியவளே! குமரியில் ஆட்சி செய்த பேரரசே! எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலையாக இருப்பவளே! உன்னைத் தலைபணிந்து வாழ்த்துகிறோம் என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்த்துகிறார்.

கவிதைப் பேழை 5 அல்லது 8 மதிப்பெண்கள் (8)

 

கவிதைப் பேழை 5 அல்லது 8 மதிப்பெண்கள்

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக

அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்த்தாய்

1. கடல்- ஆடை.

2. பாரதம்- முகம்.

3. திராவிடநாடு- நெற்றி.

4. திலகம்- தமிழ்

அன்னை மொழி

1. அன்னை மொழி

2. செம்மொழி

3. பழமை

4. குமரி ஆட்சி

5. பாண்டியனின் மகள்

6. திருக்குறளின் மாண்பு

7. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நற்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.

நன்றி!