2 மதிப்பெண்
வாழ்வில் தலைக்கனம், 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
வாழ்வில் தலைக்கனம்:
பணம், பதவிகளால் வாழ்வில் தலைக்கனம் பிடித்தவர் உலகில் பலர் உண்டு.
தலைக்கனமே வாழ்வு:
அடுத்த வேளை உணவுக்காக, அலுக்காமல் கல் சுமக்கும் சித்தாளுக்கு தலைக்கனமே வாழ்வாகிப் போனது.
3 மதிப்பெண்
"சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" - இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம்: நாகூர் ரூமி எழுதிய 'சித்தாளு' என்ற கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்: அடுத்த வேளை உணவுக்காக அலுக்காமல் கல்சுமக்கும் சித்தாளின் மனத்தில் எத்தகைய துயரங்கள் இருந்தாலும், அவற்றைத் தலையில் உள்ள செங்கற்கள் அறியாது.