சிறப்புடைய இடுகை

தேம்பாவணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேம்பாவணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேம்பாவணி

 2 மதிப்பெண்

"காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்" - உவமை உணர்த்தும் கருத்து யாது?

இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே, தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டன போல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.

3 மதிப்பெண்

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

  1. 'எவையெல்லாம் அறியேன்' என்று கருணையன் கூறியவை:
  2. உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  3. நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  4. உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகை அறியேன்.
  5. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்

5 மதிப்பெண்

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

கருணையனின் கண்ணீர்!

  • கருணையின் தன் பூப்போன்ற கைகளைக் குவித்து, "பூமித்தாயே! என் அன்னையின் உடலை அன்போடு காப்பாயாக" என்று வணங்கினான். 
  • மலர்ப்படுக்கையில் அன்னையின் உடலை அடக்கம் செய்து, அதன்மீது பூக்களையும் கண்ணீரையும் பொழிந்தான்.

கருணையனின் புலம்பல்

  1. "தாயின் மணி போன்ற வாய்மையை மழைநீராகப் பருகி, அன்னையின் மார்பில் மாலையாக மனமகிழ்ந்து வாழ்ந்தேன். 
  2. மணி போன்ற மழைத்துளியின்றி பயிர் வாடியது போல வாடுகின்றேன். 
  3. கொம்பில் கொய்த மலராக வாடுகின்றேன். 
  4. நஞ்சுதடவிய எரியும்அம்புதுளைத்த புண்ணின் வேதனையை அனுபவிக்கின்றேன். 
  5. துணையைப் பிரிந்த பறவையைப் போல வாடுகின்றேன். 
  6. வழுக்கு நிலத்தில் வழிதவறியவன் போல் ஆனேன். 
  7. உயிர் பிழைக்கும் வழி அறியேன். 
  8. உணர்விழந்த உறுப்பின் தன்மை அறியேன். 
  9. உணவு தேடும் வழி அறியேன். கானில் செல்லும் வழி அறியேன். 
  10. தாய் காட்டிய வழி அறிவேன். தாயும் என்னைத் தவிக்க விட்டுப் போனாள்" என்று நவமணிமாலை போன்று நல்லறத் தவத்தை அணிந்த கருணையன் புலம்பினான்.

கருணையன் புலம்பலுக்கு இரங்கியவை

தேன்சிந்தும் மரங்களிலும் மணமலர்ச் சுனைகளிலும் உள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையனின் புலம்பலுக்கு இரங்கி, அழுவன போன்று ஒலித்தன.