சிறப்புடைய இடுகை

ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞானம்

 2 மதிப்பெண் 

காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

கையிலே வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.

3 மதிப்பெண்

வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை - இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

காலக்கழுதை

  1. எங்கள் வீட்டுச் சாளரத்தின் கதவுகள் தேக்கு மரக்கட்டையால் ஆனவை. கதவுகளில் தெருப்புழுதி வந்து ஒட்டியதாலும், கரையான் மண்வீடு கட்டியதாலும் முன்பு ஒருமுறை தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்து சாயம் அடித்தேன். 
  2. காலஓட்டத்தில் கதவுகளில் மீண்டும் தூசிபடிந்து கரையான் அரித்துக் காணப்படுகிறது. 
  3. மீண்டும் கையில் வாளித் தண்ணீர் எடுத்துக்கொண்டேன். கந்தைத்துணியைத் தண்ணீரில் நனைத்துச் சுத்தம் செய்தேன். சாயக்குவளையில் கட்டைத்தூரிகையை நனைத்து, கதவுகளுக்குச் சாயம் அடித்தேன். 
  4. எத்தனை முறை புழுதி வந்து படிந்தாலும், கரையான் அரித்தாலும், மீண்டும் மீண்டும் கதவைச் சுத்தம் செய்யும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.