சிறப்புடைய இடுகை

காற்றே வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காற்றே வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காற்றே வா

குறுவினா 

வசன கவிதை- குறிப்பு வரைக.

  1. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது 
  2. இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுவினா

மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.
குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் -தேங்கிய குட்டையில் சளப் சளப் என்று குதிக்கும் குழந்தைகள்- ஓடும் நீரில் காகித கப்பல்.

மழைக்காலக் காட்சி

சட சடவெனப் பெய்த மழை சட்டென நின்றது. உருண்டு திரண்ட மழைநீர் தெருவெங்கும் ஓடுகிறது. குடை விரித்த மரத்தின் இலைகளிலிருந்து மழைநீர் 'சொட் சொட்' எனச் சொட்டுகிறது. சில்லென்று பரவிய காற்றின் குளிர் உடலெங்கும் ஓடுகிறது. ஆங்காங்கே தேங்கிய குட்டைகளில் 'சளப் தளப்' என்று  குழந்தைகள் குதிக்கின்றன. ஓடும் நீரில் காகிதக் கப்பலை ஓடவிட்டு ஒருவரை ஒருவர் முந்த முயல்கின்றனர். அழகியல் ததும்பும் அற்புதமான காட்சி இது.

நெடுவினா 

மலர்ந்த மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே -வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே- கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.

காற்றே வா

திரண்ட கருத்து

பாதி மலர்ந்த மலரைப் போலவும், பாதி புலர்ந்த காலைப்பொழுது போலவும், நதியில் குளித்துக் கொடியில் தலைதுவட்டி நடந்து வரும் இளந்தென்றல் போலவும், பொதிகை மலையில் தோன்றி மதுரையில் வளர்ந்த தமிழ் போலவும் விளங்கும் அழகு குழந்தைக்குக் கண்ணதாசன் தாலாட்டுப் பாடியுள்ளார்.

தவழும் காற்று

நதியில் குளித்த பிறகு தலையைத் துவட்டாவிட்டால் காய்ச்சல் வரும் அல்லவா? அதனை மனத்தில்கொண்ட கண்ணதாசன், தென்றல் காற்று கொடியில் தலையைத் துவட்டிக்கொண்டு மெல்ல நடந்து வருவதாக நயமுடன் பாடியுள்ளார்.

மோனை நயம்

முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும்‌.
லர்ந்தும் 
லராத

எதுகை நயம்

இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்
ர்ந்தும் 
ராத

இயைபு நயம் 

இறுதி எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இயைபு ஆகும்
வண்ணமே 
அன்னமே

முரண் நயம்

முரண்பட்ட சொற்களால் தொடுப்பது முரண் நயம் ஆகும்.
மலர்ந்தும் x மலராத

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்னும் முதுமொழிக்கு ஏற்ப, இப்பாடலில் சந்த நயம் பயின்று வந்துள்ளது.
மலர்ந்த மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே -வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே

அணி நயம்

இப்பாடலில் 'போல' என்னும் உவம உருபு பயின்று வந்துள்ளதால், இஃது உவமை அணியாகும்.

காற்றே வா

வசன கவிதை - குறிப்பு வரைக.

வசன கவிதை

  1. உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் 'வசனகவிதை' எனப்படுகிறது.  
  2. இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

3 மதிப்பெண்

மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக 

குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல் 

மழை நின்றவுடன் புலப்படும் காட்சி 

இலைகளில் 'சொட் சொட்' என்று நீர் சொட்டுகிறது.  உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது. தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்‘ என்று குழந்தைகள் குதிக்கின்றனர்; ஓடும் நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.