வினா என் 21- திருக்குறள் மனப்பாடப் பாடல்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
இன்மையின் இன்னாதது யாதனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
முல்லைப்பாட்டு
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் " என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்.
பெருமாள் திருமொழி
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா
நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே .
நீதி வெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அரும் துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வி என்றே போற்று .
தேம்பாவணி
நவமணி வடக்கயில் போல் நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும் துணர் அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம் கொல் என்று ஒலித்து அழுவ போன்றே