2 மதிப்பெண்
செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.
அ) அருளைப் பெருக்கு!
அறிவைத் திருத்து !!
மயக்கம் அகற்று !!!
ஆ) அறிவுக்குத் தெளிவு தரும்
உயிருக்குத் துணையாய் வரும்!!
3 மதிப்பெண்
உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார் . அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
- இளமையில் கல், கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்னும் தொடர்கள் கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
- இன்று நீ வேலைக்குச் சென்றால், உனக்குக் கிடைக்கும் தொகை பெரியதாகத் தோன்றும். ஆனால், உன்னுடைய எதிர்காலம் வீணாகும்.