2 மதிப்பெண்
1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
- 'வருகின்ற கோடை விடுமுறை' என்பது எதிர்காலம். இத்தொடரில் எதிர்காலப் பயனிலையாக 'செல்வேன்' என்று அமைவதற்குப் பதிலாக நிகழ்காலப் பயனிலை 'செல்கிறேன்' என்று வந்துள்ளது.
- இங்கே நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து, இது காலவழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.
2). "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிரக் கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.
3 மதிப்பெண்
நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலட்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்" என்றார். "இதோ சென்று விட்டேன்" என்றவாற அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, "என்னடா விளையாட வேண்டுமா?" என்று கேட்டு, அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
- வழுவமைதிகள்
- நிறைத்திருந்தது
- வாழைத்தோப்பு
- குட்டியுடன் நின்றிருந்த மாடு
- இலட்சுமி கூப்பிடுகிறாள்
- இதோ சென்றுவிட்டேன்
- என்னடா விளையாட வேண்டுமா?
- அவனை அவிழ்த்து விட்டேன்
- நீயும் இவனும் விளையாடுங்கள்
- இலட்சுமி நீரைக் குடித்தாள்