சிறப்புடைய இடுகை

திருக்குறள்

 2 மதிப்பெண்

1. நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் அண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.

2). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். - இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை

3). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்து போன்று - உயிரினும் ஓம்பப்படும்.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

விடை:

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப் படும்.

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

4). எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா மலர்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு

விடை:

அ). கூவிளம் தேமா மலர்

3 மதிப்பெண்

1. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக. 

இக்குறளில் 'உவமை அணி' பயின்று வந்துள்ளது.

அணியிலக்கணம்: ஒன்றை மற்றொன்றுடன் ஒப்புமைப்படுத்தும் போது, 'உவமை' ஒரு தொடராகவும், 'பொருள்' ஒரு தொடராகவும் அமைந்து இடையில் 'உவம உருபு' இடம் பெறுவது உவமை அணியாகும்.

விளக்கம்:

உவமை: வேலொடு நின்றான் இடுவென் றது

பொருள்: கோலொடு நின்றான் இரவு

உவம உருபு: போலும்

செங்கோலைக் கையில் ஏந்தி அரசன், குடிமக்களிடம் பொருள் கேட்பது, 'கள்வன்' வேலினைக் கையிலேந்தி வழிப்பறி செய்வதைப் போன்றது.

2). கவிதையைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம்

தவித்தபடி வெளிநீட்டும் கை

கரையில் கைபேசி படமெடுத்தபடி

கண்ணோட்டம் இல்லாத கைபேசிகள்!

காண்போர் யாவரும் கோமாளிகள்!!

விரைந்து சென்று உதவிடுவோம்!

விலையில்லா உயிரதைக் காத்திடுவோம்!!