2 மதிப்பெண் வினா
"மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
3 மதிப்பெண் வினாக்கள்
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
- அன்னை மொழி
- அழகு நிறைந்த செந்தமிழ்
- பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி
- குமரிக் கண்டத்தை ஆட்சி செய்தவள்
- பாண்டிய மன்னனின் மகள்
- திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.
- இந்த நினைவுகள் யாவும் பொங்கி எழுவதால் தலைபணிந்து வாழ்த்துகிறோம்
5 மதிப்பெண் வினா
மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக
ஆன்றோர்களே, தமிழ்ச் சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்..!
தமிழ்த்தாய்
- கடலை ஆடையாக அணிந்தவள்.
- பாரதம் அவளது அழகு முகம்.
- திராவிடநாடு அவளது நெற்றி.
- நெற்றியில் உள்ள திலகம் போல தமிழ் எங்கும் மணக்கிறது
- அன்னை மொழி
- அழகு நிறைந்த செந்தமிழ்
- பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி
- குமரிக் கண்டத்தை ஆட்சி செய்தவள்
- பாண்டிய மன்னனின் மகள்
- திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.
எனது பேச்சைக் கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்!