சிறப்புடைய இடுகை

இராமானுஜர் – நாடகம்

 

இராமானுஜர் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.

இராமானுஜர் நாடகம்

     கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் விசிஷ்டா அத்துவைதம் தந்த இராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காண்போம்.

ஒருமுறை இராமானுசர், அவரின் குரு பூரணரின் கட்டளையின் பேரில் புனிதத் திருமந்திரத் திருவருளைப் பெறுவதற்காக கூரேசர் மற்றும் முதலியாண்டானுடன் வந்தார்.  அதனைக் கண்ட கூரேசர், தண்டு, கொடியுடன்தானே வரச் சொன்னேன். உறவுகளை ஏன் அழைத்து வந்துள்ளீர் என்று கேட்டார்.  அதற்கு, "நீங்கள் சொன்ன தண்டு, கொடிக்கு இணையானவர்கள் இவர்கள்" என்றார் இராமானுசர்.

அதன்பின்னர் குரு, திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன் என்ற திருமந்திரத்தை மூவருக்கும் அருளினார். "இந்தத் திருமந்திரத்தை வேறு யாரிடமாவது நீங்கள் கூறினால், அதற்கு நரகமே தண்டனையாகக் கிடைக்கும்" என்றும் எச்சரித்தார் குரு.

குருவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் திருமந்திரத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் இராமானுசர் கூற, அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொன்னார்கள்.

இதனை அறிந்த பூரணர் இராமானுசரை அழைத்தார். ஏன் இவ்வாறு செய்தீர்? என்று கேட்டார். அதற்கு இராமானுசர், இதனால் நான் மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்று நரகத்தைச் சேர்வேன். ஆனால், என் மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டும்.‌ எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் சுவாமி! என்று பதில் அளித்தார்.

இராமானுசரின் பதிலைக் கேட்டு வியந்த குரு, ஆளவந்தாரின் உள்ளத்தை அறிந்தவர் தாங்கள் மட்டுமே. இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவர் தங்களே. எம்பெருமான் என்னும் திருநாமம் என்றென்றும் நிலைத்து, நீங்கள் நீடுழி வாழ வேண்டும்என்று வாழ்த்தினார்.  தன் மகனையும் அடைக்கலமாக அளித்தார்.