சிறப்புடைய இடுகை

கவிதைப் பேழை 5 அல்லது 8 மதிப்பெண்கள் (8)

 

கவிதைப் பேழை 5 அல்லது 8 மதிப்பெண்கள்

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக

அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்த்தாய்

1. கடல்- ஆடை.

2. பாரதம்- முகம்.

3. திராவிடநாடு- நெற்றி.

4. திலகம்- தமிழ்

அன்னை மொழி

1. அன்னை மொழி

2. செம்மொழி

3. பழமை

4. குமரி ஆட்சி

5. பாண்டியனின் மகள்

6. திருக்குறளின் மாண்பு

7. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நற்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.

நன்றி!


முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

1. திருமாலின் தோற்றம்

சக்கரம், சங்கு, திருமகள் தாங்கியவர். மூவுலகை அளந்தவர்.

2. மாலை நேரப்பெருமழை

திருமால் போன்ற மேகம் மலை மீது மோதி மழை பெய்தது.

3. பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்

கடவுளை வணங்கி நற்சொல் கேட்டு நின்றனர்.

4. ஆயர் குல மகளின் நற்சொல் கேட்டல்

ஆயர் குலப் பெண் ஒருத்தி கன்றை நோக்கி “உன் தாயர் இப்பொழுதே வந்துவிடுவர்” என்றாள்.

முதுபெண்டிர் “நற்சொல் கேட்டோம்” என்றனர்.


நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல்

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில், அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும் புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள், இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்...

கீரந்தையார்,

1. ஒன்றுமில்லாத ஊழிக்காலம் வந்தது.

2. ஆகாயம் தோன்றியது.

3. காற்றின் ஊழிக்காலம் வந்தது.

4. நெருப்பு ஊழிக்காலம் வந்தது.

5. பனியும் மழையும் பெய்த ஊழிக்காலம் வந்தது.

6. எரிமலை வெடிப்புகளால் நிலமும் கடலும் தோன்றியது என்று கூறியுள்ளார்.


இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்கு செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

1) புலவர் கவிதை படித்தார்.

2) மன்னன் தலையை அசைக்கவில்லை.

3) புலவர் இறைவனிடம் முறையிட்டார்.

4) உன்னை அவமதித்தான் என்றார்

5) இறைவன் வைகை ஆற்றின் தென்புறம் கோவில் கொண்டார்.

6) பாண்டியன் மன்னிப்பு வேண்டினான்.

7) புலவர்க்குச் சிறப்புச் செய்தான்


சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்’ என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. அன்பும் பண்பும் குணச்சித்திரம் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்கடை போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் சான்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கவி காட்டுகிறது. தண்டலை மயில்கள் ஆட....

இவ்வுரையைத் தொடர்க!

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்

 வணக்கம்

1. வண்டுகள் பாட,

2. மயில்கள் ஆட,

3. மேகங்கள் மத்தளம் கொட்ட,

4. தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்ற,

5.குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்கும் மருதநிலக் காட்சியை

6.நீரலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.


பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலில் நயத்தை விளக்குக.

நாட்டு வளமும் ஆட்சிச் சிறப்பும்

1.யானைகளே பிணிக்கப்படும். மக்கள் பிணிக்கப்படுவதில்லை.

2.சிலம்புகளே புலம்பும். மக்கள் புலம்புவதில்லை.

3.ஓடைகளே கலங்கும். மக்கள் கலங்குவதில்லை.

4.ஆற்றுநீரே அடைக்கப்படும். மக்கள் அடைக்கப் படுவதில்லை.

5.மாங்காய்களே வடுப்படும். மக்கள் வடுப்படுவதில்லை.

6.மலர்களே பறிக்கப்படும். உரிமைகள் பறிக்கப்படுவது இல்லை.

7.காடுகளில் மட்டுமே கொடிகள் உண்டு. மக்களில் கொடியவர் இல்லை.

8.வண்டுகள் மட்டுமே கள் குடிக்கும். மக்கள் கள் குடிப்பதில்லை.

9.மூங்கில்களில் மட்டுமே வெறுமை உள்ளது. மக்களிடம் வறுமை இல்லை.

10.வைக்கோல் மட்டுமே போராக எழும். வேறு போர் இல்லை.

11.மலைகளில் மட்டுமே இருள் உண்டு. மக்களிடம் இருள் இல்லை

12.மான்களே மருளும். மக்கள் மருள்வதில்லை

13.மீன்களே பிறழும்.. மக்கள் பிறழ்வதில்லை.

14.செவிலித்தாயரே சினம் கொள்வர். வேறு யாரும் சினம் கொள்வதில்லை.

15.புலவர் பாட்டிலே பொருள் மறைந்து இருக்கும். மக்கள் யாரும் பொருளை மறைத்து வைப்பதில்லை.

16.இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப் பாடுவர். தேவையின்றி வேறு யாரும் ஆடிப் பாடுவதில்லை.

இராசராசன் நாட்டின் இயல்பு இது.


காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்

இவை சரி என்றால் இயம்புவது என் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யாருமே அறிந்தவை; அறிக!

- கண்ணதாசன்.

பாநயம் பாராட்டல்

காலக்கணிதம்

திரண்ட கருத்து

1) நான் ஒரு கவிஞன்.

2) காலத்தைக் கணிப்பேன்.

3) கவிதை படைப்பேன்.

4) நானே தெய்வம்.

5) என் கவிதைகள் விலை மிகுந்தவை.

6) முத்தொழில் புரிகிறேன்

சொல் நயம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்- சொல்நயம்

பொருள் நயம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்- பொருள் நயம்

சந்த நயம்

சந்தநயம் வந்துள்ளது.

மோனை நயம்

கவிஞன்

கணிதம்

எதுகை நயம்

கருப்படு

பொருளை

முரண் நயம்

ஆக்கல் ×அழித்தல்

சரி×தவறு

இயைபு நயம்

கணிதம்

தெய்வம்

அணிநயம்

உருவக அணி


கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

கருணையனின் கண்ணீர்!

மலர்ப்படுக்கையில் அடக்கம் செய்து பூக்களையும் கண்ணீரையும் பொழிந்தான்.

கருணையனின் புலம்பல்

1. வாடிய பயிராக

2. கொய்த மலராக

3. அம்புதுளைத்த புண்ணாக

4. துணையைப் பிரிந்த பறவையாக

5. வழிதவறி

6. பிழைக்க வழியின்றி

7. உணவு தேடும் வழி தெரியாமல்.

8. செல்லும் வழி அறியாமல் வாடுகிறேன்