வசன கவிதை - குறிப்பு வரைக.
வசன கவிதை
- உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் 'வசனகவிதை' எனப்படுகிறது.
- இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.
3 மதிப்பெண்
மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக
குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல்
மழை நின்றவுடன் புலப்படும் காட்சி
இலைகளில் 'சொட் சொட்' என்று நீர் சொட்டுகிறது. உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது. தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்‘ என்று குழந்தைகள் குதிக்கின்றனர்; ஓடும் நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.