பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
- அம்மாவும் அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
- உனக்குப் பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!
மாஅல் - பொருளும் இலக்கண குறிப்பும் தருக.
- பொருள்: மாஅல் - மால் - திருமால். பெருவடிவு கொண்டு உலகத்தை ஓரடியால் அளந்தவர்.
- இலக்கணக்குறிப்பு: மாஅல் -செய்யுளிசை அளபெடை
5 மதிப்பெண் வினா
முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
திருமாலின் தோற்றம்
- சக்கரம், சங்கினை ஏந்தியிருப்பவர்; திருமகளை மார்பிலே தாங்கியவர்; மூவுலகை அளந்தவர்.
மாலை நேரப்பெருமழை
- திருமால் போன்ற மேகம் கடல் நீரைக் குடித்து, எழுந்து, மலை மீது மோதி மழை பெய்தது.
பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்
- நெல்லுடன் முல்லை மலர்களைத் தூவி, தொழுது நற்சொல் கேட்டு நின்றனர்.
ஆயர் குல மகளின் நற்சொல் கேட்டல்
- இடையர் குலப் பெண் ஒருத்தி இளம் கன்று அடைகின்ற துன்பத்தை நினைத்து, "உன் தாயர் இப்பொழுதே வந்துவிடுவர்" என்றாள். இதைக்கேட்ட முதுபெண்டிர் "நன்மை தரும் நற்சொல்லைக் கேட்டோம்" என்றனர்