சிறப்புடைய இடுகை

இலக்கணம் 3 மதிப்பெண் வினாக்கள் (10)

 இலக்கணம் 3 மதிப்பெண் வினாக்கள்

1.‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்றுகள் – தொழிற் பெயர்கள்:

1. அறிந்தது – அறிதல்

2. அறியாதது – அறியாமை

3. புரிந்தது – புரிதல்

4. புரியாதது – புரியாமை

5. தெரிந்தது – தெரிதல்

6. தெரியாதது – தெரியாமை

7. பிறந்தது – பிறத்தல்

8. பிறவாதது – பிறவாமை


2.தோட்டத்தில் மல்லிகைப்பூப் பறித்த பூங்கொடி வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டிற்கு வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

தொகைச்சொற்கள்:

1.மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

2. பூப்பறித்த- வேற்றுமைத்தொகை.

3. ஆடுமாடுகள்-உம்மைத்தொகை.

4. தண்ணீர்த்தொட்டி- வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.

5.குடிநீர் நிரப்பினாள்- வேற்றுமைத்தொகை.

6. குடிநீர்-வினைத்தொகை.


3. கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீ எழும்பு!

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!

-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

1.கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்

2.காலையில் நீ எழும்பு! – வேற்றுமைத் தொடர்.

3.மாமழை பெய்கையிலே – உரிச்சொற்றொடர்.

4.மாம்பூவே கண்ணுறங்கு! – விளித்தொடர்

5.பாடினேன் தாலாட்டு! – வினைமுற்றுத் தொடர்.

6.ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – அடுக்குத்தொடர்


4.வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

உவமை அணி

இலக்கணம்: உவமை, பொருள், உவம உருபு ஆகியவை வருவது உவமை அணியாகும்.

விளக்கம்:

1. உவமை: வேலொடு நின்றான் இடுவென் றது

2. பொருள்: கோலொடு நின்றான் இரவு

3. உவம உருபு: போலும்


5. நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலட்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்” என்றார். “இதோ சென்று விட்டேன்” என்றவாற அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு, அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

வழுவமைதிகள்

1. நிறைத்திருந்தது

2. வாழைத்தோப்பு

3. குட்டியுடன் நின்றிருந்த மாடு

4. இலட்சுமி கூப்பிடுகிறாள்

5. இதோ சென்றுவிட்டேன்

6. அவனை அவிழ்த்து விட்டேன்


6. முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை

இன்மை புகுத்தி விடும் – இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

விளக்கம்:

1) முயற்சி செல்வத்தைத் தரும்.

2)முயற்சி இல்லாமை வறுமையை உண்டாக்கும்.

3)ஆற்றுநீரின் போக்கைப் போல தொடக்கம் முதல் இறுதிவரை நேராக வைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.


7.கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’. – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

1) குறிஞ்சி: தேன் எடுத்தல், மூலிகைகள் சேகரித்தல்,

2) முல்லை : மேய்ச்சல்

3) மருதம்: உழவு

4)நெய்தல்: மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல்


8. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான் – இது வஞ்சித் திணை ஆகும்.

வஞ்சித் திணை: மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.


9.ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

1. அளவடிகளைப் பெற்று வரும்

2. இயற்சீர் வரும். பிற சீரும் வரும்.

3. ஆசிரியத் தளைகள் வரும்.

4. 3 முதல் பல அடிகள் வரும்

5. அகவலோசை பெற்று வரும்

6. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு


10.கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக

தற்குறிப்பேற்ற அணி

எடுத்துக்காட்டு:

‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக் கைகாட்ட’

பாடலின் பொருள்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது காற்றில் அசைந்தது. கோவலனை மதுரைக்குள் வரவேண்டாம் என தடுப்பது போல, கை காட்டியதாக கவிஞர் தம் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார். எனவே இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.