சிறப்புடைய இடுகை

ஒரு மதிப்பெண் வினாத்தொகுப்பு பயிற்சிக்கு மட்டும்


1. மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது____
2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது_____
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-________
4. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' -தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-_______
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_________
6. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?_____
7.
a. ஒவ்வோர்ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
b. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
c. காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
விடை:
8. “பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?_______
9. ‘பெரிய மீசை' சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?______
10. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
a. கொண்டல்-
b. கோடை-
c. வாடை-
d. தென்றல்-
11. பின்வருவனவற்றுள் முறையான தொடர்-_____
12. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-_____
13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-_____
14. காசிக்காண்டம் என்பது-______
15. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-______
16. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’-யாரிடம் யார் கூறியது?-______
17. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது
விடை:
18. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?____
19. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே_____
20. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?____
21. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி____
22. அருந்துணை என்பதைப் பிரித்தால்_____
23. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______வினா
“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது______விடை
24. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?______
25. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _____
26. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______
27. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?_______
28. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?_____
29. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?________
30. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?______
சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
திருத்தம்:
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
கல்-__________, குலை-_________, மந்தை-____________, கட்டு-____________
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க
1. எழுகதிர்- __________________________________________
2. கீரிபாம்பு-
3. பூங்குழல் வந்தாள்-
4. மலை வாழ்வார்-
5. முத்துப்பல்-
வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவிதுளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.
பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க
அ) இயற்கை- செயற்கை
ஆ) கொடு- கோடு
இ) கொள்- கோள்
ஈ) சிறு- சீறு
உ) தான்-தாம்
ஊ) விதி- வீதி
பழமொழிகளை நிறைவு செய்க
1. உப்பில்லாப்______________
2. ஒரு பானை ______________
3. உப்பிட்டவரை ______________
4. விருந்தும் ___________
5. அளவுக்கு___________
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதித் தமிழ் எண்ணுரு தருக.
மூவேந்தர்கள், நாற்றிசை, முத்தமிழ், இருதிணை, முப்பால், ஐந்திணை, நானிலம், அறுசுவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக
மனக்கோட்டை-
கண்ணும் கருத்தும்-
அள்ளி இறைத்தல்-
ஆறப்போடுதல்-
எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
• நாற்றிசையும் செல்லாத நாடில்லை:
• எறும்புந்தன் கையால் எண்சாண்:
• ஐந்துசால்பு ஊன்றிய தூண்:
• நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி:
• ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி:
விடுபட்ட எழுத்துக்களை நிரப்பி அந்த எழுத்துக்களை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
இ_கு (பறவையிடம் இருப்பது)
கு_தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா_ (மன்னரிடம் இருப்பது)
அ_கா (தங்கைக்கு மூத்தவள்)
ம_ (அறிவின் மறுபெயர்)
பட_ (நீரில் செல்வது)
நூலின் பெயர்:
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக
சிலை- சீலை, தொடு-தோடு, மடு-மாடு, மலை-மாலை, வளி-வாளி, விடு-வீடு
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக
குறிப்பு: எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர், கொடுத்துச் சிவந்த, மறைத்துக் காட்டு, அருகில் அமர்க, பெரியவரின் அமைதி, புயலுக்கு பின்.
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக
புதுக்கோட்டை,திருச்சிராப்பள்ளி,உதகமண்டலம், கோயம்புத்தூர் , நாகப்பட்டினம், புதுச்சேரி , கும்பகோணம், திருநெல்வேலி , மன்னார்குடி, மைலாப்பூர் , சைதாப்பேட்டை
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக
வானம் ______ தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் _______.
________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் __________ புல்வெளிகளில் கதிரவனின் _________ வெயில் பரவிக்கிடக்கிறது
வெயிலில் அலையாதே; உடல் ________
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக
(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).
விரட்டாதீர்கள்- பறவைக்கு _______ வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் _________.
காலை ஒளியினில் மலரிதழ் __________. சோலைப்பூவினில் வண்டினம் _________.
மலைமுகட்டில் மேகம் _________- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் _________.
வாழ்க்கையில் ___________ மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் _________________கூத்து சொல்லும்.
தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ________.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் __________.
தொழில் பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.
1) நிலத்துக்கு அடியில் கிடைக்கும் __________ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருட்களை மண்ணுக்கு அடியில் ______________ நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.
2) காட்டு விலங்குகளைச் ___________ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ____________ திருந்த உதவுகிறது.
3) காற்றின் மெல்லிய ______________ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _____________ பூக்களை மாலை ஆக்குகிறது
4) பசுமையான ___________யைக் ___________ கண்ணுக்கு நல்லது.
5) பொதுவாழ்வில் _______________ கூடாது. __________ல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது
புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க
தார்போன்ற நிறமுண்டு கரியும் இல்லை
பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமும் இல்லை
சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியும் இல்லை
சோர்ந்து போகாமல் வீடு அமைப்பேன் பொறியாளரும் இல்லை
வீட்டுக்கு வரும் முன்னே, வருவதை கூறுவேன்.
நான் யார்?
தொடரைப் படித்து விடையைக் கண்டறிக
1) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________
2) விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை_______
3)கல் சிலை ஆகுமெனில், நெல் ______ஆகும்.
4)குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______
5)மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது______
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
2) பழமைக்கு எதிரானது- எழுதுகோலில் பயன்படும்.
3) இருக்கும்பொழுது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை.
4) நாலெழுத்தில் கண் சிமிட்டும்- கடையிரண்டில் நீந்திச் செல்லும்
5) ஓரெழுத்தில் சோலை- இரண்டு எழுத்தில் வனம்.
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்து எழுதுக.
1) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
2) புவி சிலிர்த்து, மண்ணில் இருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாக பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
3) சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூ வாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
4) இரவின் இருள் அமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும். கசகசத்த உயிரினங்கள்.
5) நின்றுவிட்ட மழை தரும் குளிர். சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர் பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
6) குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக் காற்றின் ஆலோலம்.
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்
2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை மீள எழுதுக.
1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால் வாடி வந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
3. நளனும் அவனது துணைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக்கண்டு அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.
4. சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ) எ.கா. பூமணி
குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க
(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)
எ.கா. குறளின்பத்தில் திளைக்காத புலவர் உண்டா?
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
2) பழமைக்கு எதிரானது- எழுதுகோலில் பயன்படும்.
3) இருக்கும்பொழுது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை.
4) நாலெழுத்தில் கண் சிமிட்டும்- கடையிரண்டில் நீந்திச் செல்லும்
5) ஓரெழுத்தில் சோலை- இரண்டு எழுத்தில் வனம்.
தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக
எ.கா. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச் சொற்றொடர்களை கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
1) இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
(தொடர் சொற்றொடராக மாற்றுக)
2) ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
3) கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
(கலவைச் சொற்றொடராக மாற்றுக)
4) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
பாடல்
பாடறியேன் படிப்பறியேன் -நான்தான்
பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்- நான்தான்
எழுத்துவகை தானறியேன்
படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா-நான்தான்
பங்காளிய ஏன் தேடுறேன்
எழுத நல்லா தெரிஞ்சிருந்தா- நான் தான்
எதிராளிய ஏன் தேடுறேன்.
நாலெழுத்து படிச்சிருந்தா- நான்தான்
நாலு தேசம் போய் வருவேன்
நாலு பக்கம் வரப்புக்குள்ளே தெனமும்
நான் பாடுறேன் தெம்மாங்கு தான்.
பாடல் எழுந்த சூழல்:
மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க.
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!