சிறப்புடைய இடுகை

one word


பலவுள் தெரிக
1. மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது____(வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்)
2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது_____(சருகும் சண்டும்)
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-________(எம்+தமிழ்+நா)
4. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' -தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-_______(பாடல்; கேட்டவர்)
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_________(மணி வகை)
6. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?______(மோனை, எதுகை)
7.
a. ஒவ்வோர்ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
b. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
c. காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
விடை:செய்தி 1,3 ஆகியன சரி
8. “பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?_______(கடல் நீர் ஆவியாகி மேகமாதல்)
9. ‘பெரிய மீசை' சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?_______(அன்மொழித்தொகை)
10. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
a. கொண்டல்-கிழக்கு
b. கோடை-மேற்கு
c. வாடை-வடக்கு
d. தென்றல்-தெற்கு
11. பின்வருவனவற்றுள் முறையான தொடர்-_____(தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு)
12. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-_____(சிற்றூர்)
13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-_____(வேற்றுமை உருபு)
14. காசிக்காண்டம் என்பது-______(காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்)
15. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-______(இன்மையிலும் விருந்து)
16. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’-யாரிடம் யார் கூறியது?-______(இறைவனிடம் குலசேகராழ்வார்)
17. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது
விடை: தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
18. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?____(வானத்தையும் பேரொலியையும்)
19. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே_____(பால் வழுவமைதி, திணை வழுவமைதி)
20. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?____(இலா)
21. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி____(சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது)
22. அருந்துணை என்பதைப் பிரித்தால்_____(அருமை+துணை)
23. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______வினா (அறியா).
“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது______விடை(சுட்டு)
24. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?______(கல்வி)
25. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்______(மன்னன்). இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _____(இறைவன்)
26. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______(குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்)
27. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?_______(ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது)
28. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?_____(தளரப் பிணைத்தால்)
29. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?________(கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?)
30. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?______(அங்கு வறுமை இல்லாததால்)
சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
திருத்தம்:
“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே”
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
கல்-கற்குவியல், குலை-பழக்குலை, மந்தை-ஆட்டுமந்தை, கட்டு-புற்கட்டு
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க
1. எழுகதிர்- வினைத்தொகை. எழுகதிரைத் தொழுதெழ இன்பங்கூடுமடி பாப்பா!
2. கீரிபாம்பு- உம்மைத்தொகை. கீரியும் பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன.
3. பூங்குழல் வந்தாள்- அன்மொழித்தொகை. பூப்போன்ற குழலை உடைய பெண் வந்தாள்
4. மலை வாழ்வார்- ஏழாம் வேற்றுமைத்தொகை. மலைவாழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர்.
5. முத்துப்பல்- உவமைத்தொகை. முருகப்பெருமானின் முத்துப்பல் ஒளி வீசியது.
வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்ற(ப்)படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது(க்) கேட்கும்.
பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி(ப்) பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு(க்) குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே(க்) கூறலாம்.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க
அ) இயற்கை- செயற்கை
செயற்கையை விடுத்து இயற்கையோடு வாழ்.
ஆ) கொடு- கோடு
கோடு போட உன்னுடைய அளவுகோலைக் கொடு.
இ) கொள்- கோள்
கொள்கையுடன் வாழ உறுதிகொள்
ஈ) சிறு- சீறு
சிறுபாம்பு சீறியது
உ) தான்-தாம்
அவன்தான் மறுத்தான். அவர்தாம் முடித்தார்
ஊ) விதி- வீதி
விதியை நொந்து வீதியில் அலையாதே!
பழமொழிகளை நிறைவு செய்க
1. உப்பில்லாப்______________(பண்டம் குப்பையிலே)
2. ஒரு பானை _______________(சோற்றுக்கு ஒரு சோறு பதம்)
3. உப்பிட்டவரை ______________(உள்ளளவும் நினை).
4. விருந்தும் ___________(மருந்தும் மூன்று நாளைக்குத்தான்).
5. அளவுக்கு___________(மீறினால் அமிர்தமும் நஞ்சு).
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதித் தமிழ் எண்ணுரு தருக.
1. மூவேந்தர்கள்=மூன்று+வேந்தர்கள் ங
2. நாற்றிசை =நான்கு+திசை ச
3. முத்தமிழ் =மூன்று+தமிழ் ங
4. இருதிணை =இரண்டு+திணை உ
5. முப்பால் =மூன்று+பால் ங
6. ஐந்திணை =ஐந்து+திணை ரு
7. நானிலம் =நான்கு+நிலம் ச
8. அறுசுவை=ஆறு+சுவை சா
9. பத்துப்பாட்டு =பத்து+பாட்டு க0
10. எட்டுத்தொகை=எட்டு+தொகை அ
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக
மனக்கோட்டை-தொண்டர் ஒருவர், தனக்குத் தலைவர் பதவி கிடைக்கும் என மனக்கோட்டை கட்டினார்
கண்ணும் கருத்தும்-மாணவர்கள் கண்ணும் கருத்துமாய்ப் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்.
அள்ளி இறைத்தல்-தலைவர் தேர்தலில் வென்ற மகிழ்ச்சியில், பணத்தை அள்ளி இறைத்தார்
ஆறப்போடுதல்-முருகன் தனது இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கும் பணியை இரண்டு நாட்களுக்கு ஆறப்போட்டான்
எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
• நாற்றிசையும் செல்லாத நாடில்லை: நான்கு – ச
• எறும்புந்தன் கையால் எண்சாண்: எட்டு – அ
• ஐந்துசால்பு ஊன்றிய தூண்: ஐந்து- ரு
• நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி: நான்கு, இரண்டு- ச, உ
• ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி: ஆயிரம் – க000
விடுபட்ட எழுத்துக்களை நிரப்பி அந்த எழுத்துக்களை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
இ_கு (பறவையிடம் இருப்பது)
கு_தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா_ (மன்னரிடம் இருப்பது)
அ_கா (தங்கைக்கு மூத்தவள்)
ம_ (அறிவின் மறுபெயர்)
பட_ (நீரில் செல்வது)
இறகு, குருதி, வாள், அக்கா, மதி, படகு. (தி-ரு-க்-கு-ற-ள்)
நூலின் பெயர்: திருக்குறள்
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக
சிலை- சீலை
சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.
தொடு-தோடு
காதில் தொங்கிய தோடு, தோளைத் தொட்டுக் கொண்டிருந்தது.
மடு-மாடு
மடுவில் மாடு குளித்தது. (மடு-குளம்)
மலை-மாலை
மாலையில் மலைமீது ஏறினார்.
வளி-வாளி
வாளியில் வளியே நிறைந்திருக்கிறது
விடு-வீடு
வீடுபேறு அடைய தீய செயல்களைக் கைவிட வேண்டும்
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக
குறிப்பு: எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர்- மீண்ட துயர்
கொடுத்துச் சிவந்த- கொடாது சிவந்த
மறைத்துக் காட்டு- மறையாது காட்டு
அருகில் அமர்க- தொலைவில் அமர்க
பெரியவரின் அமைதி- பெரியவரின் கூச்சல்
புயலுக்கு பின்- புயலுக்கு முன்.
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக
புதுக்கோட்டை- புதுகை
திருச்சிராப்பள்ளி- திருச்சி
உதகமண்டலம் -உதகை
கோயம்புத்தூர் -கோவை
நாகப்பட்டினம்- நாகை
புதுச்சேரி -புதுவை
கும்பகோணம் -குடந்தை
திருநெல்வேலி -நெல்லை
மன்னார்குடி-மன்னை
மைலாப்பூர் -மயிலை
சைதாப்பேட்டை- சைதை
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக
வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது
வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது
வெயிலில் அலையாதே; உடல் கருக்கும்
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக
(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).
விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மரவீடு.
காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.
மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.
தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.
தொழில் பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.
1) நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருட்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.
2) காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது.
3) காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலை ஆக்குகிறது
4) பசுமையான காட்சியைக் காணுதல் கண்ணுக்கு நல்லது.
5) பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது
புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க
தார்போன்ற நிறமுண்டு கரியும் இல்லை
பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமும் இல்லை
சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியும் இல்லை
சோர்ந்து போகாமல் வீடு அமைப்பேன் பொறியாளரும் இல்லை
வீட்டுக்கு வரும் முன்னே, வருவதை கூறுவேன்.
நான் யார்?
விடை: காகம்
தொடரைப் படித்து விடையைக் கண்டறிக
1) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________(கற்றல்)
2) விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை_______(கரு)
3)கல் சிலை ஆகுமெனில், நெல் ______ஆகும். ( சோறு)
4)குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______( எழுத்து)
5)மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது_______(பூவில்)
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
விடை: நறுமணம்
2) பழமைக்கு எதிரானது- எழுதுகோலில் பயன்படும்.
விடை: புதுமை
3) இருக்கும்பொழுது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை.
விடை: காற்று
4) நாலெழுத்தில் கண் சிமிட்டும்- கடையிரண்டில் நீந்திச் செல்லும்
விடை: விண்மீன்
5) ஓரெழுத்தில் சோலை- இரண்டு எழுத்தில் வனம்.
விடை: காடு
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்து எழுதுக.
1) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
தலைப்பு: காற்றின் பாடல்
2) புவி சிலிர்த்து, மண்ணில் இருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாக பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
தலைப்பு: மொட்டின் வருகை
3) சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூ வாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
தலைப்பு: மிதக்கும் வாசம்
4) இரவின் இருள் அமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும். கசகசத்த உயிரினங்கள்.
தலைப்பு: உயிர்ப்பின் ஏக்கம்
5) நின்றுவிட்ட மழை தரும் குளிர். சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர் பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
தலைப்பு: நீரின் சிலிர்ப்பு
6) குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக் காற்றின் ஆலோலம்.
தலைப்பு: வனத்தின் நடனம்