உரைநடை உலகம் 8 மதிப்பெண்கள்
தமிழின் சொல்வளம் குறித்தும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
அனைவருக்கும் வணக்கம்
தமிழ்ச்சொல் வளம்
தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன.
பயிர் வகைச் சொற்கள்
1. அடி வகை: தாள், தண்டு, கோல், தட்டை, தூறு, கழி, கழை, அடி
2. கிளை வகை: கவை, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு
3. இலை வகை: இலை, தாள், தோகை, ஓலை
4. பூவின் நிலை: அரும்பு, போது, மலர், வீ, செம்மல்
5. இதனால், தமிழ் சொல்வளம் உடையது
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
1. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
2. கண்டுபிடிப்பு சார்ந்த சொற்கள்
3. இணைய வளர்ச்சி
எனவே புதிய சொல்லாக்கத்திற்கான தேவை இருக்கிறது.
உங்கள் இல்லத்திற்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.
விருந்தோம்பல்
வரவேற்றேன்
1. பொங்கல் விழாவிற்கு மாமாவை அழைத்தேன்
2. காத்திருந்தேன்
3. வந்தார்.
4. முகம் மலர்ந்தேன்
5. நாற்காலி தந்தேன்
6. தண்ணீர் தந்தேன்
7. விசிறி போட்டேன்
8. உறவுகளை விசாரித்தேன்.
விருந்து உண்டோம்
• முகம் மலர்ந்து விருந்து வைத்தேன்.
உலா வந்தோம்
1. காலாற நடந்தோம்
2. களிப்புடன் பேசினோம்
பிரிய மனமில்லை
1. மாமா புறப்பட்டார்.
2. வழியனுப்பி வைத்தேன்.
3. பிரிய மனமின்றிப் பிரிந்தோம்.
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா?இக்கருத்துக்களை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்
முன்னுரை
ஒரு மனிதனைப் போலச் சிந்தித்து முடிவெடுக்கும் இயந்திரம் பற்றி விவாதிப்போம், வாருங்கள்.
பல்வேறு துறைகளில்
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திர மனிதன்
1. ஆசிரியராக,
2. வங்கி உதவியாளராக,
3. போக்குவரத்துக் காவலராக,
4. கால்நடைப் பராமரிப்பாளராக,
5.நுட்பமான அறுவைச் சிகிச்சை மருத்துவராக
மனித வாழ்வை வளப்படுத்துகிறது
எதிர்கால வெளிப்பாடுகள்
உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலால்,
1.ஆபத்தான கடினமான செயல்களைச் செய்வது
2. குழந்தைகளைப் பாதுகாப்பது
3.வயதானவர்களுக்குத் தோழனாய் இருப்பது
4. வீடு, அலுவலகப் பணி செய்வது
ஆகியவற்றில் அக்கறை கொள்ளும் என்று நம்பலாம்.
முடிவுரை
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் -அறிவியல் கருத்துகள் – பிற துறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில், வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை
முன்னுரை
மொழிபெயர்க்கும்போது சமுதாயப் பின்னணியை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழின் இலக்கியவளம்
1. சங்க இலக்கியங்கள்
2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
3. காப்பியங்கள், பக்திப் பாடல்கள்
4. சிற்றிலக்கியங்கள்
கல்வி மொழி
அனைத்துலக அறிவைப் பெற முடியும்.
பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
1. நாடகங்கள்
2. புதுக்கவிதைகள்
3. ஹைக்கூக் கவிதைகள்
அறிவியல் கருத்துகள்
1. எடிசன்
2. நியூட்டன்
3. ஆர்க்கிமிடிஸ்
4. கலிலியோ கண்டுபிடிப்புகள் திருப்பம் ஏற்படுத்தின.
பிறதுறைக் கருத்துகள்
1. தொலைக்காட்சி
2. வானொலி
3. திரைப்படம்
4. இதழ்கள்
போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் வளர்ச்சி பெறுகின்றன.
தமிழுக்குச் செழுமை
புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
முடிவுரை
பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும், அவை போன்ற புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.
நிகழ்கலை வடிவங்கள்- அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
நிகழ்த்துக் கலைகள்
மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும்.
நிகழ்கலை வடிவங்கள்
1) தெருக்கூத்து
2) பொம்மலாட்டம்
3) ஒயிலாட்டம்
4) வில்லுப்பாட்டு
5) கரகாட்டம்
6) காவடியாட்டம்.
நிகழ்விடங்கள்
எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்திக் கொள்ளலாம்
ஒப்பனைகள்
1)தாங்களே ஒப்பனை செய்து கொள்கின்றனர்.
2) உடையலங்காரம் சிறப்பானது
சிறப்பும் பழமையும்
1) விரும்பப்படும் கலை
2)உழைப்பாளர்களின் உணர்வு வெளிப்பாடு
3) கவலையைப் போக்குவது.
4) பண்பாட்டுக் கூறு.
5) தொன்மையானது
மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள்
1) ஊடகங்கள் பெருக்கம்
2) விலைவாசி உயர்வு
3) வருமானம் குறைவு
வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:
1)பண்பாட்டின் விழுமியங்கள்’ என்ற உணர்வை விதைத்தல்
2) முன்னுரிமை அளித்தல்
3)விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்குதல்
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்
வணக்கம். இளமையிலேயே மாணவர்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வும் நாட்டுப்பற்றும் ஊட்டப்பட வேண்டும்.
நாட்டு விழாக்கள்
1. ஒருமைப்பாடு
2. வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை ஊட்ட நாட்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றோம்.
விடுதலைப் போராட்ட வரலாறு
1.உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட்டு, ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஆங்கிலேயர் பெற்றனர்.
2.ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் போராடிச் சுதந்திரம் அடைந்தோம்.
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
1. இந்தியாவின் தூண்கள்.
2. நாட்டுப்பற்றுடன் சமூகத்தொண்டு புரிய வேண்டும்.
3.திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. தேசிய ஒருமைப்பாடு சகிப்புத்தன்மை, சகோதர உணர்வு வேண்டும்.
அனைவருக்கும் நன்றி வணக்கம்!