சிறப்புடைய இடுகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

 

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க வினா எண் 12-15. 4 மதிப்பெண்கள். இவற்றுள்

1. இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

2. இப்பாடலை இயற்றிய ஆசிரியர் யார்?

என்ற வினாக்கள் இடம் பெறும்.

நூலும் நூலாசிரியரும்: 2 மதிப்பெண் அல்லது 1 மதிப்பெண்

1.கனிச்சாறு(அன்னை மொழியே)- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2. தனிப்பாடல் திரட்டு(இரட்டுறமொழிதல்) -சந்தக்கவிமணி தமிழழகனார்

3.பாரதியார் கவிதைகள்(காற்றே வா)- பாரதியார்

4. முல்லைப்பாட்டு -நப்பூதனார்

5. காசிக் காண்டம் -அதிவீரராம பாண்டியர்

6. மலைபடுகடாம்- பெருங்கௌசிகனார்

7.பெருமாள் திருமொழி- குலசேகர ஆழ்வார்

8. பரிபாடல் -கீரந்தையார்

9.நீதி வெண்பா-கா.ப. செய்குதம்பிப் பாவலர்

10.திருவிளையாடல் புராணம்- பரஞ்சோதி முனிவர்

11. பூத்தொடுத்தல் - உமா மகேஸ்வரி

12.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்

13. கம்பராமாயணம் -கம்பர்

14.கு. ப. ரா. படைப்புகள் (ஏர் புதிதா?)-கு.ப.ராஜகோபாலன்

15. மெய்க்கீர்த்தி

16. சிலப்பதிகாரம் -இளங்கோவடிகள்

17.கோடை வயல் (ஞானம்)-தி.சொ. வேணுகோபாலன்

18.கண்ணதாசன் கவிதைகள் (காலக்கணிதம்)- கண்ணதாசன்

19. சித்தாளு-நாகூர் ரூமி

20. தேம்பாவணி -வீரமாமுனிவர்

ஒரு மதிப்பெண்

1.இப்பாடலில் பெற்றுள்ள அடிமோனையை எடுத்து எழுதுக

2.இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகையை எடுத்து எழுதுக

என்ற வினாக்கள் இடம் பெறும்

அடிமோனை: அடுத்தடுத்த இரண்டு அடிகளை ஒப்பீடு செய்து முதல் எழுத்து ஒன்றாக வருவதைக் கண்டறிவது.

புண்ணிய

பண்ணிய

அடி எதுகை: அடுத்தடுத்த இரண்டு அடிகளை ஒப்பீடு செய்து முதல் எழுத்துகள் அளவொத்து(குறில்-குறில் அல்லது நெடில்-நெடில்) இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவதைக் கண்டறிவது

எ.கா

புண்ணிய

பண்ணிய

ண்பெயல்- மீண்டும் => இது எதுகை அன்று. காரணம் முதல் எழுத்துக்கள் அளவொத்து வரவில்லை (குறில்-நெடில்)

ஒரு வினா - இலக்கணக் குறிப்பு கேட்கப்படலாம்.

சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்:

1.சொல்லின் இடையில் வந்தால் செய்யுளிசை அளபெடை (மாஅல்)

2.சொல்லின் இடையில் வந்தால் இன்னிசை அளபெடை (கெடுப்பதூஉம்)

3.சொல்லின் இடையில் வந்தால் சொல்லிசை அளபெடை (தலைஇய)

4.சொற்கள் அடுக்கி வந்தால் அடுக்குத்தொடர்-(ஊழ் ஊழ்)

5.சொற்கள் “அல், தல்” என முடிந்தால் அது தொழிற்பெயர் ( வாழ்தல், வியத்தல், செப்பல், உரைத்தல்)

6.சொற்களைப் பிரித்து எழுதும்போது நிலைமொழி இறுதியில் மை விகுதி வந்தால் அது பண்புத்தொகை (செந்தமிழ்=செம்மை+தமிழ், மூதூர்=முதுமை+ஊர், நன்மொழி=நன்மை+மொழி)

7. இறுதி எழுத்து வந்தால் வியங்கோள் வினைமுற்று (வருக,ஆடுக)

8. இறுதி எழுத்து ஓசையில் வந்தால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் (வாரா-ஆ)

9. சொற்களின் இறுதியில் உம் வந்தால் அது எண்ணும்மை - காடனுக்கும் கபிலனுக்கும்

10. சொற்களின் இறுதியில் உம் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை – தாய்தந்தை

11.ஏவல் வினையுடன் பெயர் சேர்ந்து வருவது வினைத்தொகை (காய்மணி செய்முறை உய்முறை பயில்தொழில் வளர்வானம் உறுதுயர்) மூன்று காலங்களுக்கும் பொருந்தும். (வளர்வானம்-வளர்ந்த வானம், வளர்கின்ற வானம், வளரும் வானம்)

12. தட சால மா தவ இவற்றின் பின்னர் சொற்கள் வருவது அது உரிச்சொற்றொடர் (தடக்கை)