சிறப்புடைய இடுகை

திருக்குறள் மனப்பாடப் பாடல்

வினா என் 21- திருக்குறள் மனப்பாடப் பாடல் -இரண்டு மதிப்பெண்கள்

1. எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

2.பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

3.பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

4.அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

5.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

6.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்

7.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்

8.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை

9.குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

10.இன்மையின் இன்னாதது யாதனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.