வினா எண் 16-விடைக்கேற்ற வினாவை எழுதுக. இரண்டு தொடர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு உரிய வினாவை எழுத வேண்டும். இரண்டு மதிப்பெண்களை உடையது.
1.தொடரின் இறுதி எழுத்தைக் கவனிக்கவும். இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதற்குப் பதிலாக அவ்வெழுத்தின் ஒற்று (ன் எனில் ன என்று) நீக்கி, அதனோடு துணைக்கால் எழுத வேண்டும். (ன் -> னா?, ள்->ளா?, ர்=>ரா?, ம்=>மா?, ல்=>லா?)
2.ஐகார இகர உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதன் அருகில் ‘யா’ எழுத வேண்டும். (சிறந்தவை=>சிறந்தவையா?, இல்லை =>இல்லையா?, அடிப்படை=>அடிப்படையா?, தலைவி=>தலைவியா?)
3.அகர உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதன் அருகில் ‘வா’ எழுத வேண்டும். (பெற்றன=>பெற்றனவா?, கட்டப்பட்டன=> கட்டப்பட்டனவா?, புலப்படுத்துகின்றன=>புலப்படுத்துகின்றனவா?)
4.உகர உயிர்மெய் எழுத்தாக இருந்தால் உகரம் நீக்கி துணைக்கால் சேர்க்க வேண்டும். (இருந்தது=>இருந்ததா?, உண்டு=>உண்டா?, தெரிகிறது=>தெரிகிறதா?, காட்டப்படுகிறது=>காட்டப்படுகிறதா?, முடிகிறது=>முடிகிறதா?)
5.ஆகார ஏகார ஓகார உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதன் அருகில் ‘வா’ சேர்க்க வேண்டும்.(அன்னமய்யா=>அன்னமய்யாவா?, மொழியே=>மொழியேவா?)
Shortcut:
1.ன், ர், ள்=>னா?, ரா?, ளா? (இராமன்=>இராமனா?
2.ஐயா- ஐகாரம்( ஐ ஓசை) வந்தால் யா சேர்க்க)
3.அவா- அகரம் (அ ஓசை) வந்தால் வா சேர்க்க)