சிறப்புடைய இடுகை

நிற்க அதற்குத் தக(9).

 நிற்க அதற்குத் தக. 5 மதிப்பெண்கள்

இன்சொல் பேசுவதால் உண்டாகும் நன்மைகள் யாவை?

1. பிறர் மனம் மகிழும்

2. அறம் வளரும்

3. புகழ் பெருகும்

4. நல்ல நண்பர்கள் சேருவர்

5. அன்பு நிறையும்.


இதில் நீங்கள் செல்லும் வழி யாது? இன்சொல் வழி


உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது? இன்சொல் வழி


புயலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

1.புயலின் போது வெளியே செல்லக்கூடாது

2.தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

3.வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்ற வேண்டும்.

4.தீப்பெட்டி, மெழுகுவர்த்தி ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்

5.கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்


துரித உணவுப் பழக்கம் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுக

1.வறுத்த, பொறித்த பண்டங்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவு

2.மேலும் அவை அதிக கலோரி மதிப்பை உடையவை

3.அதனால் உடலில் அதிகமாகக் கொழுப்பு சேர்கிறது

4.இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொற்றாநோய்கள் உருவாவதற்கு வழி வகுக்கின்றது.

5.எனவே நாம் பாரம்பரிய உணவுப் பழக்கத்திற்கு மாற வேண்டியது அவசியமாகும்.


தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிகளில் மூழ்கி இருக்கும் நண்பர்களுக்கு நீங்கள் காட்டும் வழி யாது?

1.நண்பர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்

2.நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்

3.நண்பர்களுடன் பேசி மகிழ வேண்டும்.

4.நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

5.பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும்


பள்ளியிலும் வீட்டிலும் எவ்வாறு நடந்து கொள்வாய்?

பள்ளியில் நான்

1.நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

2.உடன்பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்

3.ஒழுக்கமாக இருப்பேன்

4.நன்றாகப் படிப்பேன்


வீட்டில் நான்

1.வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்

2.வீட்டுப் பாடங்களைச் செய்வேன்

3.பெற்றோரை மதிப்பேன்

4.மூத்தோர்க்கு உதவி செய்வேன்.



நிகழ்த்துக் கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய இருப்பனவற்றை வரிசைப்படுத்துக.

1.பிறந்தநாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்

2.எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்

3.ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்ள முனைவேன்

4.கலைகளின் பெருமையை நண்பர்களிடம் பகிர்வேன்

5. கலைஞர்களைப் பாராட்டுவேன்


கல்வெட்டுகளைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்

1.கல்வெட்டுச் செய்திகளை நண்பர்களிடம் பகிர்வேன்

2. கல்வெட்டுகளை ஆய்வு செய்வேன்

3.கல்வெட்டுகளின் சிறப்பைக் கூறுவேன்

4. கல்வெட்டுகளைப் பாதுகாப்பேன்

5. கல்வெட்டுகளைப் பராமரிப்பேன்


நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும்

1.நல்ல சொற்களைப் பேசுதல்-எதிரியையும் நண்பனாக்கலாம்

2.புறம் பேசாதிருத்தல்-நல்ல நட்பைப் பெறலாம்

3.பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல்-மனமகிழ்ச்சி பெறலாம்

4.பொறுமையாக இருத்தல்-வெற்றி பெறலாம்

5.நன்மை செய்தல்- புகழ் பெறலாம்


நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனஉணர்வு

1.எழுதுகோல் கொடுத்து உதவி- மனநிறைவு

2.உறவினருக்குப் பண உதவி -நன்றி உணர்வு

3.பசித்தவருக்கு உணவிட்டது-இரக்க உணர்வு

4.படிக்காதவருக்குப் படிவம் நிரப்பியது- நம்பிக்கை உணர்வு

5.முதியோருக்கு உதவியது - மகிழ்ச்சி உணர்வு