கடிதம் எழுதுக 5 மதிப்பெண்கள்
புகார்க் கடிதம்
அனுப்புநர்
அஅஅஅ,
ஆஆஆஆ,
இஇஇஇ.
பெறுநர்
உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப்பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,
சென்னை.
அம்மா,
பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்...
வணக்கம். நான் நேற்று முல்லை உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பிரியாணி ஒன்று வாங்கினேன். தரமற்றதாக இருந்தது. விலை கூடுதலாக இருந்தது.
எனவே, முல்லை உணவு விடுதி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
அஅஅஅ
இடம் : சங்கரலிங்கபுரம்.
நாள் : 23.09.2020
இணைப்பு:
உணவுக் கட்டணச் சீட்டு நகல்
உறைமேல் முகவரி
பெறுநர்
உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப்பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,
சென்னை.
பாராட்டுக் கடிதம்
அஅஅஅ,
26-09-2022.
அன்புள்ள நண்பா,
நலம். நலம் அறிய ஆவல். ‘மரம் இயற்கையின் வரம்’ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய் என்பதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன்; உள்ளம் மகிழ்ந்தேன்.
சுற்றுச்சூழல் ஆர்வலன் நீ. பசுமைக் காவலன் நீ. உன்னுடைய வெற்றி தொடர வாழ்த்துகள்.
அன்புள்ள நண்பன்,
அஅஅஅ
உறைமேல் முகவரி:
பெறுநர்
அஅஅஅ,
ஆஆஆஆ,
இஇஇஇ.
நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
விண்ணப்பம்
அனுப்புநர்
அஅஅஅ,
ஆஆஆஆ,
இஇஇஇ.
பெறுநர்
ஆசிரியர்,
தினமணி,
இஇஇஇ..
அம்மா,
பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல்...
வணக்கம். தங்கள் நாளிதழின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன். நன்றி!
இப்படிக்கு,
அஅஅஅ.
இடம்: இஇஇஇ
நாள் : 10.01.2021
இணைப்பு:
‘உழவு தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற கட்டுரை
உறைமேல் முகவரி
பெறுநர்
ஆசிரியர்,
தினமணி,
இஇஇஇ.
பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டும் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
உறவினருக்குக் கடிதம்
அஅஅஅ,
12-10-2020.
அன்புள்ள அத்தை,
வணக்கம். நலம். நலம் அறிய ஆவல். பள்ளித்திடல் பணப்பையைக் கண்டேன். உரியவரைத் தொடர்பு கொண்டேன். ஒப்படைத்தேன். ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள்.
நன்றி அத்தை!
அன்புள்ள,
அஅஅஅ.
உறைமேல் முகவரி
பெறுநர்
அஅஅஅ,
ஆஆஆஆ,
இஇஇஇ.
உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்
அனுப்புநர்
அஅஅஅ,
ஆஆஆஆ,
இஇஇஇ.
பெறுநர்
மின்வாரிய அலுவலர்,
மின்வாரிய அலுவலகம்,
இஇஇஇ.
அம்மா,
பொருள்: பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தர வேண்டுதல்...
வணக்கம். எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. சரிசெய்யும்படி வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
அஅஅஅ.
இடம் : அஅஅஅ
நாள் : 24.09.2020
உறைமேல் முகவரி:
பெறுநர்
மின்வாரிய அலுவலர்,
மின்வாரிய அலுவலகம்,
இஇஇஇ.