சிறப்புடைய இடுகை

இயல் 8 மெல்லக்கற்போர்

 

 சங்க இலக்கியத்தில் அறம்

 2 மதிப்பெண் 

1). குறிப்பு வரைக. - அவையம்

அவையம்:

  1. இவை அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. 
  2. இது துலாக்கோல் போல அறநெறிப்படி நீதி வழங்கியது.

3 மதிப்பெண்

1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

  1. செங்கோல் ஆட்சி வேண்டும் 
  2. அறநெறிப்படி நீதி வேண்டும்.
  3. போர் அறம் வேண்டும் 
  4. கொடை அறம் வேண்டும் 
  5. உதவி அறம் வேண்டும் 
  6. வாய்மை அறம் வேண்டும் 

2. சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம்

வணக்கம்.

  1. பூமியைக் காப்பது நமது கடமை.  
  2. தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப்புகை - சூழல் மாசுபாடு 
  3. வெப்பமயமாதல்-  பனிமலைகள் உருகுதல்- பருவகால மாற்றம் 
  4. சுற்றுச்சூழல் சட்டங்கள்-மக்கள் ஒத்துழைப்பு தேவை. 
  5. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை தேவை.
  6. பசுமையான உலகம் படைப்போம்.

  நன்றி!

காலக்கணிதம்

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்

இவை சரி என்றால் இயம்புவது என் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யாருமே அறிந்தவை; அறிக!

- கண்ணதாசன்.

பாநயம் பாராட்டல்

காலக்கணிதம்

திரண்ட கருத்து

1) நான் ஒரு கவிஞன்.

2) காலத்தைக் கணிப்பேன்.

3) கவிதை படைப்பேன்.

4) நானே தெய்வம்.

5) என்கவிதைகள் விலை மிகுந்தவை.

6) முத்தொழில் புரிகிறேன்

சொல் நயம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்- சொல்நயம்

பொருள் நயம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்- பொருள் நயம்

சந்த நயம்

சந்தநயம் வந்துள்ளது.

மோனை நயம்

கவிஞன்

கணிதம்

எதுகை நயம்

கருப்படு

பொருளை

முரண் நயம்

ஆக்கல் ×அழித்தல்

சரி×தவறு

இயைபு நயம்

கணிதம்

தெய்வம்

அணிநயம்

உருவக அணி


ஞானம்

 2 மதிப்பெண் 

காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

கையிலே வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.

3 மதிப்பெண்

வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை - இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

காலக்கழுதை

  1. எங்கள் வீட்டுச் சாளரத்தை வாளித்தண்ணீரால் கழுவினேன்.
  2. கந்தைத் துணியால் துடைத்தேன் 
  3. சாயக் குவளையில் கட்டைத் தூரிகையை நனைத்துச் சாயம் அடித்தேன். 
  4. ஆண்டுதோறும் இது நிகழ்கிறது. 
  5. என்னுடைய அறப்பணி ஓய்வதில்லை.


இராமானுசர் நாடகம்

இராமானுஜர் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.

இராமானுஜர் – நாடகம்

ஒருமுறை இராமானுசர், அவரின் குரு பூரணரின் கட்டளையின் பேரில் புனிதத் திருமந்திரத் திருவருளைப் பெறுவதற்காக கூரேசர் மற்றும் முதலியாண்டானுடன் வந்தார். அதனைக் கண்ட கூரேசர், “தண்டு, கொடியுடன்தானே வரச் சொன்னேன். உறவுகளை ஏன் அழைத்து வந்துள்ளீர்” என்று கேட்டார். அதற்கு, "நீங்கள் சொன்ன தண்டு, கொடிக்கு இணையானவர்கள் இவர்கள்" என்றார் இராமானுசர்.

அதன்பின்னர் குரு, “திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்” என்ற திருமந்திரத்தை மூவருக்கும் அருளினார். "இந்தத் திருமந்திரத்தை வேறு யாரிடமாவது நீங்கள் கூறினால், அதற்கு நரகமே தண்டனையாகக் கிடைக்கும்" என்றும் எச்சரித்தார் குரு.

குருவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் திருமந்திரத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் இராமானுசர் கூற, பொதுமக்கள் அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொன்னார்கள்.

இதனை அறிந்த பூரணர் இராமானுசரை அழைத்தார். “ஏன் இவ்வாறு செய்தீர்?” என்று கேட்டார். அதற்கு இராமானுசர், “இதனால் நான் மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்று நரகத்தைச் சேர்வேன். ஆனால், என் மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டும்.‌ எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் சுவாமி!” என்று பதில் அளித்தார்.

இராமானுசரின் பதிலைக் கேட்டு வியந்த குரு, “ஆளவந்தாரின் உள்ளத்தை அறிந்தவர் தாங்கள் மட்டுமே. இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவர் தங்களே. ‘எம்பெருமான்’ என்னும் திருநாமம் என்றென்றும் நிலைத்து, நீங்கள் நீடுழி வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார். தன் மகனையும் அடைக்கலமாக அளித்தார்

 பா வகை,அலகிடல்

2 மதிப்பெண்

1. குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குறள் வெண்பாவின் இலக்கணம்:

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதல்அடி நான்கு சீராகவும் இரண்டாம்அடி மூன்று சீராகவும் வரும்.

எடுத்துக்காட்டு:

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

கலவைத் தொடர்:

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.

3 மதிப்பெண்

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

  1. அளவடிகளைப் பெற்று வரும்
  2. இயற்சீர் பயின்று வரும். பிற சீரும் வரும். ஆனால், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள் வாரா
  3. ஆசிரியத் தளைகள் பயின்று வரும். பிற தளைகளும் கலந்து வரும்
  4. குறைந்தது மூன்று அடிகளாகவும், புலவரின் மனக்கருத்திற்கேற்பப் பல அடிகளைப் பெற்றும் வரும்
  5. அகவலோசை பெற்று வரும்
  6. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.

கடிதம் 

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

விண்ணப்பம்

அனுப்புநர்

பெயர்,

ஊர்,

மாவட்டம்.

பெறுநர்

ஆசிரியர்,

தினமணி,

மாவட்டம்.

அம்மா,

பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல்...

வணக்கம். தங்கள் நாளிதழின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன். நன்றி!

இப்படிக்கு,

பெயர்.

இடம்: ஊர்

நாள் : 18.10.2024

இணைப்பு:

‘உழவு தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற கட்டுரை

உறைமேல் முகவரி

பெறுநர்

ஆசிரியர்,

தினமணி,

மாவட்டம்.

பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டும் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

ஊர்,

18-10-2024.

அன்புள்ள அத்தை,

வணக்கம். நலம். நலம் அறிய ஆவல். பள்ளித்திடல் பணப்பையைக் கண்டேன். உரியவரைத் தொடர்பு கொண்டேன். ஒப்படைத்தேன். ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

நன்றி அத்தை!

அன்புள்ள,

ஊர்.

உறைமேல் முகவரி

பெறுநர்

பெயர்,

ஊர்,

மாவட்டம்.

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

பெயர்,

ஊர்,

மாவட்டம்.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

மாவட்டம்.

அம்மா,

பொருள்: பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தர வேண்டுதல்...

வணக்கம். எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. சரிசெய்யும்படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

பெயர்.

இடம் : ஊர் 

நாள் : 18.10.2024

உறைமேல் முகவரி:

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

மாவட்டம்.